பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அணுக்கரு பெளதிகம் அணுக்கொள்கையின் வரலாற்றுச் சுருக்கம்: எல்லாச் சடப் பொருள்களும் மிகச் சிறிய, பிரிக்க முடி யாத இறுதியான அலகுகளாலானவை என்ற கருத்து சடம், (Matter), @@#5ée (Being), 456 (Becoming) groñrpsus, றின் பொதுமைக் கருத்துக்கள் விரிவடைந்தபொழுதுதான் எழுந்தது. யவன மெய்ப்பொருளியலின் முதலுாழியின் சிறப் பான கூறுகள் இவையே. பண்டைய மெய்ப்பொருளியல் முகிழ்த்தபொழுது தேலஸ் என்பாரின் சிறந்த கூற்று ஒன்று நம் கண்ணில் படுகின்றது. அவர் கி. மு. ஆரும் நூற்ருண் டில் மிலேட்டஸ் என்ற இடத்தில் வாழ்த்தவர். நீர்தான் எல் லாப் பொருள்களுக்கும் மூலம் என்று அவர்கூறினர். ஃபிரிட்ரீச் நீட்லே' என்பாரின் விளக்கத்தினல் இச்சொற்ருெடர் மெய்ப் பொருளியலின் அடிப்படையான உயிர் நிலையாகவுள்ள சிறந்த கருத்துக்களின் மூன்றினே உணர்த்துகின்றது. முத லாவது, எல்லாப் பொருள்களின் மூலம் என்பதுபற்றிய பிரச் சினே; இரண்டாவது, சமய போதத்தையோ அல்லது கட்டுக் கதைகளையோ நாடாமல் அறிவுக்குகந்த முறையில் இப்பிரச் சினைக்குத் தீர்வு காணல் வேண்டும்; அக்காலத்தில், நீர் போன்ற கண்ணுல் காணக்கூடிய பொருள்களின் வாயிலாகவே தெளிவான விளக்கம் காணப்பெற்றது; உயிர் என்ற கருத் திற்கு அதிகச் செல்வாக்கு இல்லை; மூன்ருவது, எல்லாப் பொருள்களையும் ஒரே ஒரு விதியின் கீழ் அடக்கிக் கூறல் வேண்டும் என்ற ஒப்புக்கோள் (Postulate), தேலஸின் கூற்று தான் அடிப்படைப் பொருளேப் பற்றிய முதன் முதலாகக் கூறப்பெற்ற கருத்தாகும். அந்த அடிப்படைப் பொருளி லிருந்துதான் அகிலம் முழுவதும் தோன்றியது. எனினும், அக்காலத்தில் பொருள் (Substance) என்ற சொல் நாம் இக் 2 G&Go-Thales. 3 மிலேட்டஸ்-Milletus, 4 é GifLffG5-G80-Friedrich Nietzche. 5. இந்த அடிப்படைப் போருளை நம் நாட்டு வேதாந்த நூல் மூலப் பிரகிருதி' என்று வழங்கும்.