பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 அணுக்கரு பெளதிகம் பெறுகின்றன. ஆகவே, இதே செயல் திரும்பத்திரும்ப நடைபெறுகின்றது; துகள்களின் நேர் வேகமும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அவை ஒரு சாளரத் தின் வழியாகத் (T) தாம் வீசியெறியப்பெறும்வரை அரை வட்டங்களாலான கிட்டத்தட்ட ஒரு நீள் சுருள் அயன வீதி to (Spiral orbit) Qawas 35mášá செல்லுகின்றன; இந்தச் சாளரம் அவற்ருல் ஊடுருவிச் செல்லப்பெறுவதற்கேற்றவாறு அமைக்கப்பெற்றுள்ளது. சாளரத்தின் வழியே வெளியேறுங் கால், அவை தம்முடைய பணியை, அஃதாவது அணுக்கரு இயக்கங்கள் உண்டாக்குவதை, நிறைவேற்றுகின்றன. சைக்ளோட்ரான்களைப்பற்றிய சில புள்ளி விவரங்கள்: இத்தகைய ஒரு துணைக்கருவியைச் சரியான முறையில் பொத்திக் கையாளுவதற்கு மிகச் சிறந்த தொழில் துணுக் கத் திறன் வேண்டும். மேலும், பெளதிக ஆராய்ச்சியில் அரி தாக மேற்கொள்ளப்பெறும் எந்த துணைக்கருவியைக் காட்டி லும் சைக்ளோட்ரான் என்பது பெரிய அளவிலுள்ள ஓர் பொறியாகும். ஒரு சில புள்ளி விவரங்களைக்கூறி இதனை விளக்குவோம். சில காலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்பெற்ற சைக்ளோட்ரானின் துருவத் துண்டுகள் 95 செ.மீ குறுக்களவுள்ளவை. இந்தச் சைக்ளோட்ரானின் காந்தம் 14,000 ஒயர்ஸ்டெட்டுகள் அளவுள்ள காந்தப் புலத்தை உண்டாக்குகின்றது; இது செய்யப்பெறுவதற்கு 60 டன் இரும்பும் 10 டன் தாமிரமும் பயன்பட்டன. 14,000 ஒயர்ஸ்டெட்டு அளவுள்ள காந்தப்புலத்தை உண்டாக்கு வதற்கு 30 கிலோ வாட்டுகள் மின்சாரம் செலவாகின்றது. இந்தச் சைக்ளோட்ரான் ட்யூடெரான்களை முடுக்குவதற்குப் பயன்படுத்தப்பெற்ருல், அவை அதிலிருந்து 9MeV ஆற்றலு டன் வெளியேறுகின்றன: அஃதாவது, அவை 9,000,000 வோல்ட்டுக்கள் உள்ள ஒரு மின் அழுத்த வீழ்ச்சியினுள் (Potential drop) Grsărapâ 9upă tru ஆற்றலைப் பெறுகின் றன. இந்த மின் அழுத்த வீழ்ச்சியினுள் பாய்ந்துசெல்லும்