பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 2.49 லுள்ள ஆக்ஸிஜனுடன் (32 கிராம் வாயுநிலை ஆக்ஸிஜன்) சேர்ந்து 1 மோல் கரியமிலவாயுவை (44 கிராம் சுரியமில வாயு) உண்டாக்கி 96 கிலோ கலோரிகள் வெப்பத்தையும் விடுவிக்கின்றது என்பதை விளக்குகின்றது. மற்ருேர் எடுத்துக்காட்டு: இன்னும் ஓர் எடுத்துக்காட்டு ஆக்ஸிஜன், ஹைட்ரஜ னுடன் சேர்ந்து நீரினை உண்டாக்குவதாகும். மேற்கூறிய வாறே மோல் அலகுகளை உணர்த்தி இச்செயலினை விளக்கும் வாய்பாடு இவ்வாறு எழுதப் பெறுகின்றது: H,-30,-H,0-68.4 கிலோ கலோரிகள். ஒவ்வொரு மோல் நீர் உண்டாகும்பொழுதும் 68.4 கிலோ கலோரிகள் அளவு வெப்பம் விடுவிக்கப்பெறுகின்றது என்பதை இவ்வாய்பாடு உணர்த்துகின்றது. பொதுவாக நாம் எல்லா வேதியியல் செயல்களிலும் வெளிவிடப்பெறும் வெப்பத்தின் அளவு ஒரு மோலுக்குக் கிட்டத்தட்ட 106 கிலோ கலோரிகளுக்கு மேற்படுவதில்லை என்று கூறலாம். அணுக்கரு இயக்கத்தை வாய்பாட்டால் விளக்குதல்: இன்றைய அணுக்கரு பெளதிகத்தில் அடிக்கடி பிர யோகப்படுத்தும் அணுக்கரு இயக்கத்தை வாய்ப்பாட்டின் மூலம் எழுதி விளக்குவோம். டோபல் என்பார் கூறுகின்ற படி இந்த இயக்கத்தை 5-10 கிலோ வோல்ட்டுகள் ஆற்ற லைக் கொண்ட சாதாரணக் கால்வாய்க் கதிர்கள்மூலம் 2. H, - ஹைட்ரஜன்: H.0 - நீர். பின்னர் வருவனவற் றிற்கெல்லாம் இவ்வாறே கொள்க. 3. (3LtrLjói) - Dopel.