பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 அணுக்கரு பெளதிகம் (Canal rays) விடுவிக்கலாம்; அஃதாவது, இரண்டு ட்யூ டெரான்களால் ஏற்படும் பரிமாற்றமுள்ள (Reciprocal) செய லால் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றது; இந்தச் செயலில் பொருண்மை - எண் 1 ஐக் கொண்ட ஹைட்ரஜன் அணுக் கரு ஒன்றும், பொருண்மை . எண் 3 ஐக் கொண்ட ஹைட்ர ஜன் அணுக்கரு ஒன்றும் உண்டாகின்றன. 1 மோலைக் குறிக் கும் இந்த இயக்கத்தின் வாய்பாடு இவ்வாறு அமைகின்றது: D--,D2-H--H-4-100,000,000 கிலோ கலோரிகள். இதையே சொற்களால் விளக்கலாம்; முதலில் இரண்டு ட்யூடெரான்கள் ஒன்று சேர்கின்றன; ஆனால், அவ்வாறு ஒன்று சேர்ந்து உ எண் டா ன அணுக்கரு உடனே மேலே குறிப்பிட்டவாறு இரண்டாகப் பிளவுகின்றது. மோல் ஒன்றுக்கு 100,000,000 கிலோ கலோரிகள் வெப்பம் வெளிவிடப் பெறு வ த ா ல், ஆற்றலியலைப் பொறுத்த மட்டிலும் இது மிகவும் சா த க ம | ன செயலாகும். பெரும்பாலான அணுக்கரு இயக்கங்கள் அனைத்திலுமே வெளிவிடப்பெறும் வெப்பத்தின் அளவு இதே நிலையில் தான் உள்ளது. ஆகவே, பேரளவில் அணுக்கரு இயக்கங்கள் உடனே உண்டாக்கப்பெற்ற வுடன், அவை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நாம் உணர்கின்ருேம். அணுக்கரு இயக்கங்களால் விடுவிக்கப்பெறும் ஆற்றலின் அளவு வேதியியற் செயற்கள்ால் பெறக்கூடிய ஆற்றலின் அளவைப்போல் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மடங்கு அதிகமாக இருப்பதைக் காண்கின்ருேம். இதையே இன்னொரு விதமாகவும் கூறலாம்: ஒரே அளவுள்ள பொருள் வேதியியல் முறையில் எரிதலால் வெளிவிடும் 4. D,H களில் இடப்புறத்தின் கீழே உள்ள எண் அணு-எண் ஆகும்; இது மின்னூட்டத்தைக் குறிக்கும்; வலப் புறத்தின் மேலே எழுதும் எண் அதன் அணு - எடையைக் குறிக்கும்.