பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.54 அணுக்கரு பெளதிகம் வின் பளுவான ஐசோடாப்பாக மாறுகின்றது (5). இறுதி யாக, இந்தச் செயல் முழுவதும் மற்றும் ஒரு புரோட்டானே விழுங்கப்பெறுவதால் முற்றுவிக்கப்பெறுகின்றது. இப் பொழுது ஒரு ஹீலிய அணுக்கரு (வேறு விதமாகக் கூறினல், ஒர் ஆல்பாத் துகள்) வெளிவிடப்படுவதால் மீண்டும் ஒரு சாதாரணக்கரியின் அணுக்கரு கிடைக்கின்றது. இயக்கங்களின் இருப்புநிலைக் குறிப்பால் அறிவது : கோவையாகத் தொடர்ந்து நடைபெறும் இயக்கங் களின் இருப்புநிலைக் குறிப்பால் (Balance sheet) நாம் அறிந்து கொள்வது என்ன? முதலில், கரியின் ஒர் அணுக்கரு (C") உள்ளது; அது படிப்படியாக நான்கு புரோட்டான் களைச் சிறைபடுத்துகின்றது. இறுதியில், ஒரு ஹீலிய அணுக் கருவுடன் (Het) அதே கரியின் அணுக்கரு (C') எஞ்சுகின் றது; இவற்றுடன் 2-ஆவது, 5-ஆவது இயக்கங்களில் வெளி விடப்பெற்ற இரண்டு பாசிட்ரான்களும் உள்ளன. இந்த இருப்புநிலைக் குறிப்பின் சுருக்கத்தை இவ்வாறு கூறலாம்: நான்கு புரோட்டான்களினின்றும் ஒரு ஹீலிய அணுக்கரு வும் இரண்டு பாசிட்ரான்களும் உண்டாகின்றன. ஆகவே, இச்செயலின் நிகர முடிவினை அடியிற்கண்ட சுருக்கமான வாய்பாட்டால் குறிப்பிடலாம்: 4 (AH") →- He” -- 2 (1e") ஹீலிய அணுக்கருவில் இரண்டு புரோட்டான்களும் இரண்டு நியூட்ரான்களும் அடங்கியுள்ளன; எனவே, அதன் மின்னூட்டம் நான்கு புரோட்டான்களின் மின்னூட்டத்தை விட இரண்டு அலகுகள் குறைவாக உள்ளது. இந்த மின் னுரட்ட வேற்றுமை இரண்டு பாசிட்ரான்களின் தோற்றத் திற்குக் காரணமாகின்றது. இவ்வாறு நான்கு புரோட்டான் களில் இரண்டு, நியூட்ரான்களாக மாறிவிடுகின்றன. புரோட்டான்களின் பொருண்மையும் ஹீலிய அணுக் கருவின் பொருண்மையும் சரியாக அறியப்பெறுமாதலின்