பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 அணுக்கரு பெளதிகம் இனி, அணுக்கரு பிளவுறுதல் என்றசெயலின் இன்னும் ஒரு சில விவரங்களைக் காண்போம். அச்செயல் ஏராளமான ஆற்றலை விடுவிக்கின்றது: இன்னொரு விதமாகக் கூறினால், அணுக்கருவின் இரண்டு சில்லுகளும் அளவுகடந்த நேர்வேகத் துடன் சுழற்றி வீசியெறியப்பெறுகின்றன. இந்த ஆற்றல்ஒரு பிளவுறுதலுக்கு ஏறத்தாழ 150 MeV வீதம்-துண்டங் களின் நேர்வேகத்தை அளந்து அனுபவபூர்வமான முறையில் (Empirically) அறுதியிடப்பெறலாம்: அல்லது பொருண்மைக் குறையை உணர்த்தும் வாய்பாட்டிலிருந்தும் கணக்கி டலாம்." இஃது ஒர் அனல் விடு (Exothermic) வகைச் செயல்' ஆதலின், இது நியூட்ரான்களால் அணுக் கருதாக்கப் பெருமலேயே நிகழ்தல்கூடும். ஆனால், தாளுக அணுக்கரு பிளவுறுதல் என்பது மிக அரியதொரு நிகழ்ச்சி; எனவே, அது தொழில் முறையில் சிறிதும் முக்கியத்துவம் பெறவில்லை. ஆவர்த்த அட்டவணையின் (அட்டவணை-III.) இறுதி யிலுள்ள பல்வேறு தனிமங்களிலும் நியூட்ரான்களைக் கொண்டு அணுக்கரு தாக்குதல் ஏறத்தாழ எளிதாக அணுக் கருப் பிளவினை உண்டாக்க வல்லது. சில அணுக்கருக்கள் மெதுவாகஇயங்கும்.நியூட்ரான்களால்,அஃதாவதுவெப்ப நேர் வேகங்கொண்ட நியூட்ரான்களால், பிளவுறச் செய்யப்பெற லாம். இவற்றுள் ஒவ்வொரு அணுக்கருவும் ஒற்றைப்படைப் பொருண்மை-எண்ணைக்கொண்டது. யுரேனிய அணுக்கரு வும் (ஆU238) புளுட்டோனியம் என்ற தனிமத்தின் அணுக்கரு வும் இதற்கு விதிவிலக்கு: இதுபற்றிய செய்தி பின்னர் ஆரா யப் பெறும். இந்த இரண்டு அணுக்கருக்களிலும் ஒரு நியூட் ரான் சிறையிடப்பெறுதலில் பிணைந்துள்ள சிறிய அளவு வெப்பம் பிளவினை உண்டாக்கப் போதுமானது. அதற்கு மாருக, அதிக நேர்வேகத்தைக்கொண்ட நியூட்ரான்களால் 13. இந்நூல் பக்கம் 115 காண்க 14. அனல் விடுவகைச் செயல் - இச்செயல் நிகழுங்கால் வெப்பம் வெளியிடப் பெறுதல்.