பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 259 மட்டிலும் பிளவுறக்கூடிய வேறு அணுக்கருக்களும் உள்ளன: இதற்கு எடுத்துக்காட்டு யுரேனிய அணுக்கரு (,0'). இதனைப் பிளவுறச் செய்வதற்குக் குறைந்தது 1Mey யைக் கொண்ட நியூட்ரான்கள் தேவைப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில்கலிஃபோர்னியாவிலுள்ள மிகப்பெரியசைக்ளோ ட்ரானேக்கொண்டு செய்யப்பெற்ற அமெரிக்கச் சோதனைகள் 80 MeV-க்கு மேற்பட்ட வேகத்தைக்கொண்ட நியூட்ரான் களைக் (அல்லது வேறு அணுக்கரு எறிபொருளைக்') கொண்டு ஆவர்த்த அட்டவணையில் வெள்ளியத்திற்குக் கீழுள்ள தனி மங்களின் அணுக்கருக்களிலும் பிளவினை உண்டாக்கலாம் என்று காட்டியுள்ளன. பின்னல் கூறிய வகைகளின் அணுக்கருக்கள் மெதுவான நியூட்ரான்களைக்கொண்டு தாக்கப்பெற்ருல், அந்த நியூட் ரான்களின் ஆற்றல் பிளவினை நிகழ்த்தப் போதாதாகலின், அவை அந்த அணுக்கருக்களினின்றும் திருப்பியனுப்பப் பெறும் (பெரும்பாலும் நேர் வேக இழப்புடன்); அல்லது சிறையிடம் பெறும்" இதற்கு எடுத்துக்காட்டு யுரேனியம் அணுக்கரு(,U")ஆகும். இது ஒரு நியூட்ரானைச் சிறையிட்டுக் கொண்டு ,U239 அணுக்கருவாக மாறுகின்றது; இப்புதிய அணுக்கரு சிறிது நேரத்தில் தானகவே ஒர் எலக்ட்ரானே (பீட் டாக்கதிர்) வெளிவிட்டுக் கொண்டு .Np" (நெப்டியூனியம்) ஆகவும், Pu’ (புளுட்டோனியம்) ஆகவும் மாறுகின்றது. இந்த அணுக்கருக்களின் தன்மைகளை ஆராய்ந்த அமெரிக்க அறிவியலறிஞர்கள் 93, 94-ஆவது தனிமங்களுக்கு முறையே நெப்டியூனியம், புளுட்டோனியம் பெயர்களை இட்டனர். இங்குக் கூறிய இயக்கங்கள் " அடியிற்கண்டவாறு குறிப் பிடப்பெறுகின்றன: 15. 565.3%GLumfretfurs - California. 16. இந்நூல்-பக்கம் 143 காண்க. 17. n நியூட்ரான். - :e"-எலக்ட்ரான்,