பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 263 லாம். உண்மையாவே, அது தொழில்துறை முறையில் இது காறும் யுரேனிய அடுக்கின் மிக முக்கியமான செயல் முறை யாக இருந்து வருகின்றது. எடுத்துக்காட்டாக, போர்த் துறைப் பயன்களில் மிக முக்கிய வெடி பொருள்களாக (Explosives) இருந்துவரும் புளுட்டோனியம் யுரேனிய அணு உலையில் உற்பத்தி செய்யப்பெறுகின்றது. ஆற்றல் உற் பத்தி செய்யும் பிரச்சினைக்கு அடுத்தபடியாக, இது நியூக்ளி யானிக்ஸின் இரண்டாவது பெரும் பிரச்சினைக்குக் கொண்டு செலுத்துகின்றது; இப்பிரச்சினையை நாம் தாழ்ந்த பொருளை 2.usfjää Quiróstré6556)." ("Ennoblement of matter’) என்று குறிப்பிடலாம். (IV) அணுக்கரு இயக்கங்களால் தாழ்ந்த Qurgಷಿ - உயர்ந்த பொருளாக்குதல் செயற்கை முறையில் கதிரியக்கப் பொருள்களின் உற்பத்தி: குறைந்த மதிப்புடையபொருள்களினின்றும் அதிக மதிப் புடையபொருள்களை உற்பத்திசெய்தல் வேண்டும். அணுக்கரு இயக்கங்களால் புதிய பொருள்களே மிகச் சிறிய அளவுகளில் மாத்திரமே உண்டாக்குதல் கூடும். ஆகவே, அப்பொருள்கள் மிகச்சிறந்த முறையில் மதிப்புடையனவாக இருந்தால்தான் அவற்றின் உற்பத்தி மேற்கொள்ளப்பெறத் தக்கதாக இருக் கும். மிகச் சிறிய அளவுகளிலும் மிக விலையுயர்ந்த இந்தப் பொருள்கள் கதிரியக்கமுள்ள பொருள்களே, இவற்றின் மதிப்பு இவற்றின் கதிர்வீசலைப் பொறுத்துள்ளது; அக் கதிர்வீசல் பல வழிகளில் பயன்படுத்தப் பெறுகின்றது: இந்தப் பொருள்களின் அளவு மிகக் குறைவாக இருப்பினும் கூட அவை தரும் கதிர்வீசல் மிக அதிகமாகவே இருக்கும். இக்காரணத்தால் இக்காலத்தில் அணுக்கருப் பெளதிகத்தின் மிக மிக முக்கியமான பிரயோகம் கதிரியக்கப் பொருள்களைச்