பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 so அணுக்கரு பெளதிகம் செயற்கை முறையில் உற்பத்தி செய்வதில் அடங்கி யுள்ளது. மருத்துவத்தில் கதிரியக்கப் பொருள்கள்: கதிரியக்கமுள்ள பொருள்கள் பல்வேறு செயல்களில் பயன் படுத்தப்பெறுகின்றன. அவை மருத்துவத்தில் பல ஆண்டு களாக மூளையிலுண்டாகும் கடுமையான கழலேயின் மீது கதிர்வீசல் பாய்வதற்குப் பயன்படுத்தப்பெற்று வருகின் றன. இந்த அனுபவத்தால் கழலைகள் நன்னிலையிலுள்ள இழையத்தை (Tissue) விட கதிர்வீசலினால் மிகவும் தீவிர மாகக் கேடுறுகின்றன என்பது மெய்ப்பிக்கப் பெற்றுள்ளது. பெரும்பான்மையான சந்தர்ப்பங்களில் எக்ஸ் கதிர்கள்தாம் இச்செயலுக்குப் பயன்படுத்தப்பெறுகின்றன. ஆல்ை, ஒரு சிக்கலான நிலை ஏற்பட்டு அதனால் ஏனைய இழையத்திற்குத் தீங்கு பயக்காமல் நோயுற்ற இடத்தை அணுகுவது கடின மாக இருந்தால், கதிரியக்கப் பொருளைப் பயன்படுத்தும் முறை மேற்கொள்ளப்பெறுகின்றது. எனினும், இயற்கை யான கதிரியக்கமுள்ள பொருள்கள் மருத்துவச் செயல் களுக்கு மிகக் கட்டுப்பாடான அளவுகளில் மட்டிலும் கிடைப் பதால்-ரேடியத்தைத் தவிர ஓ. ஹான்3ே என்பாரால் கண்டு பிடிக்கப்பெற்ற மெஸோதோரியம்(Mesothoriam) மட்டிலும் நம் கவனத்திற்கு வருகின்றது-தேவைக்கு வேண்டிய அளவு களில் செயற்கை முறையில் கதிரியக்கப் பொருள்களை உற் பத்தி செய்து மருத்துவ ஆராய்ச்சியில் முக்கியமான முன் னேற்றத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கப்பெறு கின்றது; சிறப்பாக, இயற்கையில் கிடைக்கும் கதிரியக்கப் பொருள்கள் கொண்டுள்ள வேதியியற் பண்புகளிலிருந்து வேருண பண்புகளைக் கொண்ட பொருள்களே உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. 33 G. aprreir-O. Hahn