பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 அணுக்கரு பெளதிகம் அணு உலையில் வைத்து நியூட்ரான்களைக் கொண்டோ அல் லது உயர்ந்த மின் அழுத்தமுள்ள மின்னக்கியிலோ (Generator)அல்லது சைக்ளோட்ரானிலோ வைத்துப்புரோட் டான்களையோ அல்லது ட்யூடெரான்களையோ கொண்டு கதிரியக்கம் பெறச் செய்யப்பெறுகின்றது. இதில் ஒரு சிறிய Q&tingpoo spé &#&LEh (Practical difficulty) as jug) கின்றது: அஃதாவது, எந்தப் பொருளைக் கதிரியக்கமுள்ள தாக்க வேண்டுமோ அப்பொருளின் தாய்ப் பொருளில் (Original material) மிகச் சிறிய, கணக்கிலடங்காத அளவு க ளி ல் அ சுத் த ங் க ள் உள்ளன. இந்தப் பொருள் தாய்ப் பொருளினின்றும் வேதியியல் முறையில் வேறு பட்டதாக இருக்கலாம்; அஃதுடன் முழுதும் ஒத்ததாகவும் இருக்கலாம்; அஃதாவது, அதனுடைய நிலையற்ற ஐசோ டோப்புகளில் ஒன்ருக இருக்கலாம். அந்த இரண்டு பொருள் களின் வேதியியற்பண்புகள் வேறுபட்டனவாக இருந்து கணக் கில் அடங்கக் கூடிய எடையளவும் அப்பொருள் இருப்பின், சிறிதும் சங்கடமின்றி அந்த இரண்டு பொருள்களையும் வேதியியல் முறையில் பிரித்துவிடலாம். ஆனால், அப்பொருள் கணக்கிலடங்காத அளவுகளில் மிகக் குறைவாகக் கலந்திருப் பின், நிலைமை வேருகி விடுகின்றது. இச் சந்தர்ப்பங்களில் • Loaffää flaspáoscir (Adsorption phenomena) out £34. ஏற்பட்டு வழக்கமாகப் பிரிப்பதற்கு மேற்கொள்ளும் வேதியி யல் முறைகளைப் பிரயோகிப்பதைத் தடைப்படுத்துகின்றன. தாய்ப்பொருளுடன் முதலிலேயே நாம் உற்பத்தி செய்ய விரும்பும் பொருளின் கதிரியக்கமற்ற ஐசோடோப்பினை அதிகமாகச் சேர்த்து இப்பிரச்சினையைத் தீர்க்கலாம். இப் பொழுது உட்கவர்தல் நிகழ்ச்சிகள் நாம் புறக்கணித்துவிடும் அளவுக்கு மிகக் குறைந்த அளவில்தான் நடைபெறும்; கதிரியக்கமுள்ள பொருள் நிலையான ஐசோடாப்புக்களுடன் சேர்ந்து விழும் பொருளாகப் (Precipitate) படிகின்றது.