பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 279 வதே. கதிரியக்க உறைப்பின் அளவால் அடையும் முடிவு மேற்படி பொருளை அளந்து காண்பதைவிட மிகவும் சரி யாகவே இருக்கும்; உண்மையாகப் பார்த்தால், மேலே குறிப்பிட்ட எடுத்துக்காட்டு உணர்த்துவதுபோல், இன்னும் நம்பகமான ஒரு முடிவையே தருகின்றது என்று கூடச் சொல்லலாம்; காரணம், நாம் காணவேண்டிய பொருள் உண்மையில் அதுதான, இல்லேயா என்பதைத் தவருமலும் காட்டும். பரிமாற்றச் செயல்களை ஆராய்வதில்: இரண்டாவதாக, வேதியியல் துறையில் சில சமயம் பரி மாற்றச் செயல்களை ஆராய வேண்டிய இன்றியமையாமை நேரிடலாம். இஃது எவ்வித ஆராய்ச்சி முறைக்கும் எட் டாதது; சிறப்பாக ஒரே பண்புகளைக் கொண்ட தனிமங்கள் தம்முள் பரிமாறிக்கொள்ளும் செயலில் இதனைக் கண்டறி தல் சிரமமானது. எடுத்துக்காட்டாக, கந்தக அமிலமும் (Sulphuric acid) ##54 gloaqpth (Sulphurus acid) or D, சேருங்கால் இந்த இரண்டு பொருள்களிலுமுள்ள கந்தக அமில அயனிகளும் கந்தச அமில அயனிகளும் தம்முள் பரிமாற்றம் அடைகின்றனவா என்பதற்கு விடை காண்பதைக் கூறலாம். இதுகாறும், இந்த இரண்டு பொருள்களின் அணுக்களில் ஒன்றன் அணுக்களிலிருந்து பிறிதொன்றன் அணுக்களை வேறு படுத்தி அறிதல் உண்மையிலேயே சாத்தியப்படக்கூடாததாக இருந்தது. ஆளுல், இன்று கதிரியக்கம் (Radioactivity) இந்த இரண்டு பொருள்களின் சில அணுக்களையாகிலும்-ஆளுல், எப்படியும் போதுமான எண்ணிக்கையில்-குறியிடுவதற்கு வசதியளிக்கின்றது. இந்த இரண்டு பொருள்களையும் பிரித் தெடுத்த பிறகு குறிப்பிட்ட அணுக்கள் வேறு பொருள்களில் காண நேர்ந்தால், இந்நிகழ்ச்சி அணுக்கள் பரிமாற்றம் அடைந்ததை மெய்ப்பிப்பதாகின்றது. இத்தகைய சோதனை கள் S0," S0," என்ற அயனிகளுக்கிடையே கந்தக அணுக் களின் பரிமாற்றம் நடைபெறுகின்றன என்பதைக் காட்டு