பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 அணுக்கரு பெளதிகம் கின்றன. (SO, SO, என்ற குறியீடுகளுக்கு மேலுள்ள இரண்டு தொகைக் குறிகள் (Apostrophes) இந்த அயனி களின் இரட்டை எதிர்மின்னூட்டத்தைக் குறிக்கின்றன). வேறு சில வேதியியற் பிரயோகங்கள்: இவ்விடத்தில் மேலும் சில வேதியியற் பிரயோகங்களைச் சுருக்கமாகக்குறிப்பிட விரும்புகின்றேன்.280,281ஆம்பக்கங் களிலுள்ள அட்டவணை பல்வேறு வகைப் பிரயோகங்களைப் பற்றி சிறிதளவு விளக்கம் தரக்கூடும். முதலில் நாம் கரிம Lólam Goiáou?u&vlj (Inorganic chemistry) Loss) ortril வோம்; புதிய வேதியியல் தனிமங்களின் ஆராய்ச்சியினை முதலில் தொடங்குவோம். ஆவர்த்த அட்டவணையில் சில புதிய தனிமங்கள்: அண்மைக்காலம் வரையில் ஆவர்த்த அட்டவணையில் சில தனிமங்களின் இடங்கள் வெறுமையாகவே இருந்தன. வழக்கமாகச் சொல்லுகிறபடி கூறினால், இந்தத் தனிமங்கள் இன்னும் கண்டறியப்பெருதவை; ஆனால், இவை இயற்கை யில் உள்ளனவாகக் கருதப்பெறவேண்டியவை. இவற்றுள் மிக நன்ருக அறிந்தவை 43, 61 என்ற அணு-எண்களைக் கொண்டவை; அஃதாவது, அந்த எண்கள் அளவு அணுக்கரு மின்னூட்டங்களைக் கொண்டவை. நீண்ட நாட்களாகவே 43 என்ற தனிமம் இயற்கையில் கண்டறியப்பெற்றதாகவே நம்பப்பெற்று வந்தது: "மசூரியம்’ (Masurium) என்றும் அதற்குப் பெயரும் இடப்பெற்றிருந்தது. ஆனால், இன்று நாம் இவ்வாறு கருதினமை தவறு என்பதைக் காரணத்துடன் அறிகின்ருேம்; இந்த வகை நிலைத்த ஒரு தனிமம் இருக்க முடியாது என்பதையும் புரிந்துகொண்டுள்ளோம். ஏனெ னில், இந்தத் தனிமத்தின் ஒவ்வொரு ஐசோடோப்பும்

  • வேதியியலில் 1 முதல் 92 வரை எண்களால் அணுக் களைக் குறியிட்டழைப்பது ஒரு முறை.