பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 அணுக்கரு பெளதிகம் வாகும். ஆனால், அந்த வாயுவை உற்றறிந்து காண்பது மிகச் சங்கடமான செயலாதலால், அதனை உண்டாக்க மேற். கொண்ட முயற்சிகள் யாவும் வெற்றியடையவில்லை. எனி னும், கதிரியக்கமுள்ள பிஸ்மத் உளவு காட்டும் வழி-துலக்கி யாகப் பயன்படுவதால், இந்தத் திட்டத்தில் வெற்றி காண முடிந்தது. இன்னும், கூழ்நிலைப் பொருள்கள் (Colloids) பற்றிய வேதியியலில் மேலும் சில பிரயோகங்களைக் குறிப்பிடலாம்; கூழ்நிலைப் பொருள்களின் கரைசல்களையும் படிக நிலைப் பொருள்களின் கரைசல்களையும் உற்றறிவதிலும் கூழ்நிலைப் பொருள்களும் களிறிலப்பொருள்களும் (sols and gels) காலத்தால் மாறுபாடடையச் செய்வதிலும் அவை பயன் படுகின்றன. (WI) உயிரியலிலும் உயிரியல்பற்றிய வேதியியலிலும் செயற்கைக் கதிரியக்கப் பொருள்கள் செயற்கை முறையில் உண்டாக்கப்பெற்ற கதிரியக்கப் பொருள்கள் உயிரியலில் மிகச் சிறந்த பயன் விளையுமாறு உளவுகாட்டும் வழி-துலக்கிகளாகக் கையாளப்பெறுகின் றன. உயிருள்ள ஓர் உயிரியிடம் நடைபெறும் மாற்றங்கள் சோதனைக் குழலில் நடைபெறுவதை விட மிகவும் மெது வாகவே நடைபெறுகின்றன. இந்த உண்மையின் கார்ண மாக நாம் அரை-வாழ்வு அதிகமாகவுள்ள கதிரியக்க ஐசோ டோப்புக்களைப் பயன்படுத்த வேண்டியவர்களாகின்ருேம். வளர்-சிதை மாற்ற ஆராய்ச்சியில்: இத்துறையில் மிக முக்கியமான பிரயோகங்களில் ஒன்று வளர்-சிதை மாற்றத்தின் ஆராய்ச்சியாகும்; இதை ஹெல்சி யும்" பிறரும் மேற்கொண்டு நடத்தினர். முன்னர், வளர்.

  1. 6 @ಮಿಷR-Hevesy