பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு பெளதிகத்தின் செய்முறைப்... 8 శ్రీ ஒளிச்சேர்க்கை: இந்த உளவு காட்டும் வழி - துலக்கி முறையால் தீர்க்கக் கூடிய இன்ளுெரு முக்கிய பிரச்சினை கரியமிலவாயுவைத் தாவரங்கள் தன்வயமாக்கிக்கொள்வதில் ஆகும், பச்சைத் தாவரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயுவைத் தன்வயமாக்கி அதனை ஹைட்ரோ கார்பன்களாக (Hydrocarbon) மாற்று வதற்குக் கதிரவன் ஒளியால் பெறும் ஆற்றலைப் பயன்படுத்து கின்றன என்பது எல்லோரும் நன்கு அறிந்த செய்தியாகும். (இதுவே, ஒளி-வேதியியல் செயல் என்றும் வழங்கப்பெறும்). இவ்வாறு தாவரங்கள் கதிரவன் ஆற்றலைச் சேமித்து வைக் கின்றன. ஆனல், இந்தச் செயலைப்பற்றிய விவரங்கள் ஒன்றும் சரியாகத் தெரியவில்லே; இதன் பொறி நுட்ப இயலைப்பற்றிப் (Mechanism) பல்வேறு கொள்கைகள் தோற்றுவிக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தாவரமும் கிட்டத்தட்ட நான்கு ஃபோட்டான்கள் ஒளியை உட் கொண்டு தம்முடைய ஆற்றலின் துணையால் வேதியியல் எதிர் வினையை முற்றுவிக்கின்றது என்பது உறுதியாகத் தெரிந்த செய்தியாகும். இந்தப் பிரச்சி ையை நன்கு விளக்குவான் வேண்டி ரூபன்", ஹாலிட்", கேமன்' என்ற அமெரிக்க அறிவியலறிஞர்கள் பொருண்மை - எண் 11 ஐக் கொண்ட கதிரியக்கக் கரியமிலவாயுவைப் பயன்படுத்தினர்; இவ்வாயு வின் அரை - வாழ்வு 20 நிமிடங்கள். தன் வயமாகும் வழியை அன்மத்துக்கொடுப்பதற்கு முதலில் ஓர் எதிர்வினை இருட்டில் நடைபெறுகின்றது என்றும், இந்த எதிர்வினையின் பொழுது கரியமிலவாயுவிலுள்ள (Co, கார்பனும் ஆக்ஸிஜனும் ஹைட் ரஜனுடன் சேர்ந்து ஒரு பெரிய கரி மூலக் கூறில் கார் பாக்ஸில் (CooH என்ற எச்சம்) என்ற தொகுதி வடிவமாகின் றது என்றும் கண்டனர். பின்னர், கார்பாக்ஸில் என்ற 50. 5usir - Ruben. 5 1. g'spiratoll - Hassid. 52. Gsusir - Kamen. அ-19