பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 அணுக்கரு பெளதிகம் அமெரிக்க அறிவியலறிஞர்களை உற்சாகப்படுத்தியது. இம் முயற்சியில் கதிரியக்கப் பாஸ்வரத்தைக்கொண்டு நோயின் குறையறிதலில் குருதி நிறமிபற்றிய அதிகமான மாற்றங்கள் தென்பட்டன. பாஸ்வரம் மிக அதிகமாக எலும்புகளில் படிகின்றது: எலும்பு மச்சையில் (Bone marrow) செவ்வுட விகள் உண்டாகின்றன என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே, கதிரியக்கப் பாஸ்வரம் அவ்வுடலிகள் உண்டா தலைப் பாதிக்கக்கூடும் என்பது தெளிவாகின்றது. எக்ஸ் கதிர் கள் (X-rays) பாதிப்பதற்கும் கதிரியக்கப் பாஸ்வரம் பாதிப் பதற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது என்பதைக் காண் கின்ருேம்; எக்ஸ் கதிர்கள் எல்லா இழையங்களையும் (Tissues) ஒரே அளவு ஊடுருவிச் செல்கின்றன. இத்துறையில் முதன் முதலாகச் செய்யப்பெற்ற சோதனைகள் அனுகூலமான பலன் களே விளைவித்தனவாகக் கூறப்பெறுகின்றன. எனினும், இரண்டாம் உலகப் பெரும் போர் காரணமாக அவற்றைப் பற்றி அதிகமான தகவல்களே அறியக் கூடவில்லை. குருதி நிறமிகள்பற்றிய மாற்றங்களே அறியும் ஆராய்ச்சி பற்றிய இத்தகைய சோதனைகள் ஜெர்மெனியிலும் மேற்கொள்ளப் பெற்றன. கதிரியக்க ஈயம்: மேலும், கதிரியக்க ஈயத்தைக் (Lead) கொண்டு குத்திப் புகுத்தும் சோதனைகள் செய்யப்பெற்றுள்ளன: தொழிலாளர் களிடையே சில சமயம் நேரிடும் ஈயநஞ்சினைப் (Lead poison ing)போக்கவும் மருத்துவத்துறையில் சிகிச்சை செய்வதில் சில முடிவுகளைக் காணவும் இவை மேற்கொள்ளப்பெற்றன. ஓர் உயிரியினுள் ஈயம்புகுத்தப்பெற்ருல், அதன்பெரும்பகுதி விரை வில் வெளியேற்றப்பெறுகின்றது; அதில் மிகக் குறைவான எச்சமே கல்லீரலிலும் (Liver) சிறு நீரகங்களிலும் (Kidneys) தங்குகின்றது. ஈயம் புற்று நோயால் பாதிக்கப்பெற்ற இழை யங்களில் படிவதில்லை. ஆகவே, புற்றுநோய் சிகிச்சையில் அதனைப் பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பெற்ற