பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை 7 செயலேப் பெறுகின்றது; அஃது அணுக்களால் பல்வேறு அமைப்புக்களையும் இயக்கங்களையும் பெற்று வடிவ கணிதத் 5'igih (Geometry) guääa?u gégih (Kinematics) asar $ யாக அமைகின்றது. அணு வெட்டவெளியில் ஒரு சிறப்பான நிலையையும் வடிவத்தையும் பெற்று, சில இயக்கங்களையும் நிறைவேற்று கின்றது என்று கருதப்பெறினும், இந்தத் தூய்மையான வடிவகணிதப் பண்புகளைத் தவிர, அதற்கென்று தனிமை யான இலக்கணம் ஒன்றும் கற்பிக்கப்பெறவில்லை. அணுவிற்கு நிறம், மணம், சுவை ஆகிய ஒருபண்பும் இல்லை; அணுக்களின் மாற்றங்களும் சடுதி மாற்றங்களும் (Mutations) உட்பட மானிடப் புலன்கள் அறியக் கூடிய அவற்றின் பண்பு கள் யாவும் அணு க் க ளி ன் இயக்கத்தாலும் இடப் பெயர்ச்சியாலும் உண்டாகியவையே என்று கருதப் பெற்றன. ஒரு மொழியின் நெடுங்கணக்கிலுள்ள ஒரேவித எ ழு த் து க் க ளே க் கொண்டே இன்பியல் நாடகமும் துன்பியல் நாடகமும் எழுத இயலுவதுபோல், இந்த அகிலத்திலுள்ள பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் யாவும் அணுக்க ளால் விளைந்தவையே என்றும், அணுக்களின் பல்வேறு நிலை களும் பல்வேறு இயக்கங்களும் அவற்றை உண்டாக்குகின்றன என்றும் கருதப்பெற்றன. ஒரு பொருள் நிறத்தைப் பெற்றி ருப்பதும், அஃது இனிப்பையோ துவர்ப்பையோ பெற்றிருப் பதும் வெறும் மாயத் தோற்றங்களே. அணுக்களும் வெட்ட வெளியும் மட்டிலுமே உண்மையில் நிலை பெற்றிருப்பவை’ என்று டெமாக்ரீட்டஸ் என்ற யவன மெய்ப்பொருளியல் அறிஞர் கூறிப் போந்தார். பிளேட்டோவின் கருத்து: அணுக்கொள்கைபற்றிய அடிப்படைக் கருத்துக்கள் பின்னர் வந்த யவன மெய்ப்பொருளியல் அறிஞர்களால் மேற்கொள்ளப்பெற்று சிறிது திருத்தியமைக்கப்பெற்றன.