பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கொள்கை § (11) பத்தொன்பதாவது நூற்ருண்டுவரை நிலவிய நவீன அணுக்கொள்கை மேற்கூறப்பெற்ற முன்னேற்றம் எல்லாம் ஒரு சில நூற் ருண்டுகளில் நடைபெற்றன. அவை யாவற்றையும் திரும்ப வும் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு முன்னர், இன்னொரு சிந்தனையாளர் இக் கருத்துக்களை ஏற்று அவற்றை ஓரளவு பயனுடையவையாக மாற்றுவதற்கு முன்னரே, இரண்டா யிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. பண்டைக் காலத்தின் பிற்பகுதியில், சிறப்பாக இடைக்காலப் பகுதியில், அரிஸ்டாட் டிலின்" தத்துவம் வாதமற்ற அடிப்படையாக ஏற்றுக்கொள் ளப்பெற்றது. கிறித்தவ மனப்பான்மையைப் பொறுத்த வரையில் உண்மை நிலையில் பெரியதொரு மாற்றம் ஏற்பட் டது; அதன் காரணமாக நீண்ட காலம்வரை மக்களின் கவ னம் உலகாயத இயற்தை அன்னையால் (Material Nature) ஈர்க்கப் பெறவில்லை. 'அணு' என்ற கருத்தின் தோற்றம் : பல நூற்ருண்டுகளாகப் புறக்கணிக்கப்பெற்ற இக்கருத் தின் போக்குகளை மீண்டும் உயிர்ப்பித்த முதல் மெய்ப்பொரு விரியல் அறிஞர்ஃபிரெஞ்சு நாட்டவர்; கேலண்டி" என்ற பெய ருடையோர். மெய்ப்பொருளியல் அறிஞராக இருந்ததுடன் இவர் ஒரு சமய சித்தாந்தியாகவும் (Theologian) இருந்தார்; இவர் கி. பி. 1592-இல் புராவென்ஸ்" என்ற இடத்தில் பிறந்து கி. பி. 1665-இல் பாரிஸ்" மாநகரத்தில் இயற்கை எய்தினர். இவர் கலிலியோ’, கெப்லர்” ஆகிய அறிஞர் களின் காலத்தவர். எனவே, அவர் புத்துயிர் பெற்ற இயற்கை அறிவியலின் முதல் அருஞ்செயல்களைக் கண்ணுற் ருர். கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பயனின்றிக் கழிந்த 20 gyfieiv Litlilą si-Aristotle. 21 Gaswain lą-Gassendi. 22 Lorr. Gagārsī)-Provence. 23 Lurriño)-Paris. 24 கவிவியோ-aேlileo. 25 Qsilapis-Kepler.