பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔魔4 அணுக்கரு பெளதிகம் பார் இதற்கு முன்னர் நடைபெற்றுவந்ததைப்போலவே, சிறிய அளவில் அவ்வேலை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஆணையிட்டார். எனவே, அனைத்திற்கும் காரணமாக வுள்ள ஆற்றலை உண்டாக்கும் ஒரு யுரேனிய அடுக்கினை வளாச் செய்வதுதான் முடிவுபெறவேண்டிய ஒரே நோக்க மாக இருந்தது; உண்மையில், இந்த ஒரே நோக்கத்தை முழுதும் முற்றுப்பெறச் செய்வதற்கே எதிர்காலத்தில் செய் யப்பெறவேண்டிய வேலே முழுதும் திருப்பப்பெற்றது. அதன் பிறகு 1942-ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் யுரேனியத் தினின்றும் வெப்பத்தை எவ்வாறு செயற்படும்பொருளுக்கு (அஃதாவது, நீர் அல்லது நீராவிக்கு) மாற்றுவது என்பது பற்றிய தொழில்துறைப் பிரச்சினைகள் வெப்பத்துறைபற்றிய நிபுணர்களிடம் கலந்து ஆராயப்பெற்றன. கடற்படைத் துறைத் தொழில் நிபுணர்கள் யுரேனியத்தினின்றும் வெளிப் படும் ஆற்றவை எவ்வெவ்வாறெல்லாம் போர்க் கப்பல்களில் கையாளலாம் என்று அறியும் நோக்கத்துடன் அக்கூட்டத் திற்கு வந்திருந்தனர். கெய்ஸெர் வில்ஹெல்ம் பெளதிக ஆராய்ச்சி நிலையம், கெய்லர் வில்ஹெல்ம் கேஸெல்ஸ் சாப்ட் என்ற நிலையத்தில் புதுப்பிக்கப்பெற்று அதனைத் தோற்றுவித் தவரே அதன் இயக்குநராகவும் அமர்த்தப்பெற் ருர். அந்த நிலையத்தில் திட்டமிடப்பெற்றிருந்த பெரிய யுரேனிய அடுக்குகளின் ஆராய்ச்சிகளை ஆயத்தம் செய்வதற்கு ஒரு விசாலமான நிலவறை ஆய்வகம் ஒன்று சேர்க்கப்பெற் றது (வர்ட்ஸ்). சில முக்கியமான சோதனை முடிவுகள்: எனினும், இந்தக் காலத்தில் ஏற்கெனவே வேலை பளு அளவுக்கு மீறி சுமத்தப்பெற்றிருந்த ஜெர்மானிய நாட்டின் தொழில் துறை போரினலேற்பட்ட அலுப்பையும் உணரத் தொடங்கியது. யுரேனியமும் உருண்டைவடிவ யுரேனியத் துண்டுகளும் சிறிய அளவுகளில்தான் உற்பத்தி செய்யப்பெற் றன; அவற்றின் ஒப்படைப்பும் (Delivery) தாமதத்துட