பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அணுக்கரு பெளதிகம் பிறகு, மீண்டும் அறிவியல் புலம் வளம்பெறத் தொடங் கியது. காலண்டியுட்பட இந்தப் புதிய இயற்கை அறிவியலின் பிரதிநிதிகளாக இருந்தோர் அரிஸ்டாட்டிலின் கொள் கையை எதிர்த்துப் புரட்சி செய்தனர்; இவர்கள் பண்டைக் காலத்திய வேறு மெய்ப்பொருளியல் அறிஞர்களின் கருத்துக் களை ஒப்புக்கொண்டனர். ஆகவே, காஸண்டி என்பார் டெமாக்ரீட்டஸின் கொள்கைகளைத் தழுவி அவற்றிற்கு முழுமையாகவே உலகாயத வடிவு கொடுத்தார். இவரும் இவ்வுலகம் இறுதியான, பிரிக்கவொண்ணுத, கண்ணுக்குப் புலஞகாத மிகச் சிறிய அலகுகளானது-அணுக்களா லானது--என்ற கொள்கையினரே. டெமாக்ரீட்டலைப் போலவே இவரும் பல்வேறு வகை நிகழ்ச்சிகளும் அணுக்க ளின் பல்வேறு வகை அமைப்புக்களாலும் இயக்கங்களாலும் விளைந்தவையே என்று கருதினர். அணுக் கொள்கையின் துணைக்கொண்டு பெளதிக நிகழ்ச்சிகளை இன்னும் மிகத் தெளி வாக-மிக எளிதாக என்றுகூடச் சொல்லலாம்-விளக்கக் கூடும் என்ற கருத்து ஏற்கெனவே தாளுக எழுந்திருந்தது. எனவே நீரும், திராட்சைப் பழச்சாறும் கலந்த கலவையை நன்ருகக் கலந்த இரு வகை மணலின் கலவையுடன் ஒப்பிட லாம்; மணலின் கலவை மிக நன்ருகக் கலக்கப்பெறுவதால் இரண்டு வகை மணற் பொடிகளும் தற்செயலாக ஒன்ருே டொன்று நெருங்கிக் கலந்து வினியோகிக்கப்பெற்றுள்ளன. நீரின் அணுக்களும் திராட்சைச் சாற்றின் அணுக்களும் கரை யாத நிலையில் தற்செயலாக ஒன்று சேர்ந்துள்ள மணற்பொடி களே ஒத்துள்ளன. அன்றியும், நவீன காலத்தில் மிகத் தெளி வாகவும் விளக்கமாகவும் நாம் பெறுவதைப்போல் இல்லா விடினும், ஒரளவு அதைப் போலவே சடப்பொருளின் திரட்சி நிலைகள் அணுக் கொள்கையினல் விளக்கப்பெறுதல் கூடும் என்ற கருத்தும் எழுந்தது. இன்று நாம் திட நீரில்-பனிக் கட்டியில்-அணுக்கள் வரிசை வரிசையாக ஒர் ஒழுங்கில் இறு கப் பிணைக்கப்பெற்றுள்ளன என்பதை நன்ருக அறிவோம்.