பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு 3.23 தேவையான உதவி பெறுவதன் நிமித்தம் விரைவானபலன் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளைத் தரவேண்டிய நிலையில் இருந்தனர். இந்நிலையின் காரணமாக, இந்த நிபுணர்கள் ஆட்சிபீட இராணுவத் தலைவருடன் அணுகுண்டுகள் உற் பத்தி செய்வதுபற்றி எந்தவிதமான தொழில் முயற்சியும் செய்ய வேண்டும் என்று சொல்லுவதற்கே துணியவில்லை. அமைதிகாலத் திட்டம்-அதில் நம்பிக்கை: தொடக்கத்திலிருந்தே ஜெர்மானிய பெளதிக அறிஞர் கள் அத்திட்டத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் மிக அக் கறையுடன் முயன்று தாம் நிபுணர்கள் என்ற முறையில் இந்த அறிக்கையில் கூறப்பெற்ற வழிகளில் கொண்டு செலுத்தத் தம் செல்வாக்கைப் பயன்படுத்தினர். எதிர்பா ராத நிலையில் அவர்கள் அணுகுண்டுகளை உற்பத்தி செய் வதா, அன்றி செய்யக்கூடாதா என்ற முடிவு அவர்கட்டு அளிக்கப்பெறவில்லை. நெருக்கடியான ஆண்டாகிய 1942.ஐ நோக்க, முறையை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் முன்ளுேடி களில் அணுக்கருவாற்றலைப் பயன்படுத்தும் பிரச்சினையில் தாமாக வழிகாடி.டிகளாக அமைந்தன. ஒரு ஜெர்மானியப் பெளதிக அறிஞருக்கு இப்பணி மிக முக்சியமானதாகவே தோன்றியது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது, ஹான், ஸ்ட்ராஸ்மன் என்ற இரண்டு ஜெர்மானிய அறிவியலறிஞர் களின் கண்டுபிடிப்பால் சாத்தியபடுவதாக அமைந்தது. அவர்களுடைய கண்டுபிடிப்பிலிருந்து வளர வேண்டிய முக் கியமான தொழில்துறை ஆக்க வேலைத் திட்டங்கள், அமைதி காலத் திட்டங்களுடன் சேர்ந்து, ஜெர்மெனியிலேயே தொடங்கப்பெற்று நாளடைவில் அங்கு நற்பயண விளை விக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடன் நாம் மனநிறைவு பெறலாம்.