பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 அணுக்கரு பெளதிகம் குறிப்பிட்டால், நவீன முறையில் வேதியியல் தனிமங்களைப் பற்றிய பொதுமைக் கருத்தின் தொடக்க நிலைக்கு இவர் தான் பெருந் தொண்டாற்றிஞர் என்று சொல்லவேண்டும். ஏற்கெனவே யவனர்கள் அடிப்படையான இயற்கை நிகழ்ச்சி களுடன்-ஒய்வும் இயக்கமும், மண்ணும் நெருப்பும்தனிமங்கள்பற்றிய கருத்தினைத் தொடர்பு படுத்தியிருந்த னர்; ஆனல், பாயில் முற்றிலும் உலகாயத முறையில் இக் கருத்தினை வேதியியல் செய்முறைகளுடன் தொடர்பு படுத் திக் காட்டினர். வேதியியலால் பல்வேறுபட்ட பொருள் களைப் பிற பொருள்களாக மாற்ற முடிந்தது. பாயில் எழுப் பிய விஞ இதுதான்: இயற்கையிலுள்ள ஒருபடித்தான, எண் ணற்ற வகைப் பொருள்கள் யாவும் எப்பொருள்களா லானவை? இன்னும் அவர் வினவிஞர்: மீண்டும் பிரிக்க முடி யாதவையும் ஏதாவது ஒரு முறையில் எல்லாப் பொருள்களி லும் அடங்கி யிருப்பவையுமான தனிமங்கள் யாவை? பாயில் காலத்திற்குப் பல நூற்முண்டுகட்கு முன்னிருந்த இரசவாதி கள் (Alchemists) எழுப்பிய, இதிலிருந்து முற்றிலும் வேறு பட்ட, வினவிலிருந்தே இப் பிரச்சினை எழுந்தது. ஒவ்வொரு பொருளையும் இறுதியாக ஒரே ஒர் அடிப்படைப் பொருளாக மாற்றி விடலாம் என்ற அடிப்படைக் கருத்திலிருந்தே பண் டைய இரசவாதம் முளைத்தது. எந்தப் பொருளையும், அல் லது எந்தச் சடப்பொருளையும் பிறிதொன்ருக மாற்றிவிட லாம் என்பது இந்த விதிப்படி இயலக் கூடியதே. எடுத்துக் காட்டாக, பாதரசத்தைப் பொன்னக மாற்றலாம். ஆனல், இத்துறையில் மேற்கொள்ளப்பெற்ற எம்முயற்சி யும் பயன் அளிக்கவில்லை; இத்தகைய மாற்றத்தை வேதி யியல் முறையில் என்றுமே முற்றுவிக்க முடியாது. எனவே, இம்முறையில்-வேதியியற் செய்முறைக்கு உட்படுத்திலுைம் -சடப்பொருள் ஒருபடித்தாக அமைந்திருக்கவில்லை என்பது வெளிப்படை ஆளுல், எந்த வேதியியற் செய்முறையின லும் மாற்ற முடியாத அடிப்படைப் பொருள்கள் இருந்தே திரவேண்டும் என்பது பெறப்படுகின்றது. எனினும், பாயில் காலத்திலிருந்தே இத்தகைய பல அடிப்படைப் பொருள்கள்