பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல் முகம் செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய்க் காண்டேனே." -குலசேகராழ்வார். 'பிறநாட்டு கல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.' என்ற புதுமைக் கவிஞர் பாரதியாரின் குரல் பல்லாண்டு கட்கு முன்னரே பல்கலைக்கழக மாளிகையிலும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. அதன் விளைவே இம்மொழிபெயர்ப்பின் தோற்றமாகும். சுமார் பத்தாண்டுகட்கு முன்னர் சென்னைப் பல்கலைக் கழகப் பரிசினைப் பெற்ற இந்த அறிவியல் குழந்தை 'நாமகரணம் பெற்று வெளியில் உலவ முடியாமல் இருந்த தெல்லாம் ஒரு நீண்ட கதை. அக்குழந்தை ஏழுமலையான் திருவடிவாரத்திலிருந்து உலவத் தொடங்க வேண்டும் என்ற 'ஊழ் பெற்றிருந்தது போலும்! இந்த மொழி பெயர்ப்பினைப் பல்கலைக் கழக நியதிப்படி ஒருவர்பின் ஒருவராக மூன்று பெளதிக அறிஞர்கள் மேற் பார்த்தனர். முதலாமவர் பரமபதம் எய்தினர்; ஏனைய இருவர் இடையில் கைவிட்டனர். என் வேண்டுகோளுக் கிணங்கி என் அருமை நண்பர் டாக்டர் மா. இராதா கிருஷ்ணன் எம். எஸ்.சி., பிஎச். டி., (திருவேங்கடவன் 1. பெருமாள் திருமொழி-4. 9. 2. பாரதியார்: கவிதைகள்-தமிழ்-3.