பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I8 அணுக்கரு பெளதிகம் முதன் முதலாகத் தொடங்கி வைத்தார். இந்த விசையை (Force) அவர் ஆராய்ந்தபொழுது, அது மின்சாரத் தன்மை யுடன் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அண்மைக்கால அணுக் கொள்கை : சுமார் 120 ஆண்டுகட்கு முன்னர் உள்ள அணுக் கொள் கையின் நிலையை இவ்வாறு சுருக்கமாகக் கூறலாம்: மிகப் பேரெண்ணிக்கையிலுள்ள வேதியியற் கூட்டுப்பொருள்களை மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள வேதியியல் தனிமங்களாகக் குறைத்துக் கொள்ளலாம்; இத் தனிமங்களில் பெரும் பான்மையானவை கண்டறியப்பெற்றுவிட்டன. இத் தனிமங் களின் பொருண்மை விகிதங்களும் கிட்டத்தட்டச் சரியான அளவில் கண்டறியப்பெற்று விட்டன. எடுத்துக்காட்டாக, ஹைட்ரஜன் அணுவைவிட ஆக்ஸிஜன் அணு ஏறக்குறைய 16 மடங்கும், நைட்ரஜன் அணு 14 மடங்கும் பளுவாக உள்ளன. எனினும், பல இடை வெளிகள் இன்னும் நிரப்பப் பெருமல் இருந்தன. அணுக்களின் முழுமையான (Absolute) பருமனைப்பற்றியோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பரிமாண அளவு இடத்தில் அவை இருக்கும் எண்ணிக்கையின் அளவைப் பற்றியோ ஒன்றும் தெரிந்தபாடில்லை. நமக்குத் தெரிந்த தெல்லாம் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையிலும் அமுக்கத்தி லும் உள்ள வாயுக்களில் ஒரே எண்ணிக்கையுள்ள மூலக்கூறு கள் இருக்கும் என்பது மட்டிலுமே. நாம் அணுவினப்பற்றிச் சரியாக அறிந்திருந்ததெல்லாம், அது கிட்டத்தட்ட கதிரவன் ஒளிக்கற்றையிலுள்ள ஒரு சிறு துகளின் பருமன் இருக்கலாம் அல்லது மிகச் சிறிதாக இருக்கலாம் என்பதுதான்"; டெமாக் ரீட்டஸ்-ம் இக்கருத்தினையே கொண்டிருந்தார். இங்ங்னமே அணுக்களின் வடிவத்தைப்பற்றியோ அவற்றினிடையே நில வும் விசைகளைப்பற்றியோ நமக்கு ஒன்றுமே தெரியாதிருந் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: 39 இல் நுழை கதிரின் நுண் அணுப் புரைய' என்பது திருவாசகம் (திரு அண்டப் பகுதி-வரி 5.)