பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக் கொள்கை 28 உயர்ந்தது. இந்த மூன்று ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட பணியின்மூலம் ஒரு வாயு என்பது-ஒருவாறு ஈக்களின் கூட் டத்துடன் ஒப்பிடக்கூடிய-விரைந்து இயங்கும் மூலக்கூறு களைக் கொண்ட ஒரு பொருள் என்ற பொதுமைக் கருத்து ஒர் உறுதியான அடிப்படையைப் பெற்றது. இது திட்ட மான கணித விதிகளுக்கும் இசைந்திருந்தது. கி. பி. 1865-இல் மிகச் சிறப்பு வாய்ந்த ஒர் அருஞ் செயல் நிகழ்ந்தது. லாஷ்மிட்' என்பார், ஒரளவு ஏறத்தாழ இருந்தாலும், முதன்முதலாக அணுக்களின் பருமனத் தீர் மானித்தார். இதிலிருந்து ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தி லுள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை அறுதியிடப் பெற்றது. இவருக்கு முன்னதாக வாழ்ந்த ராபர்ட் மேயரைப்" போலவே, லாஷ்மிட் என்பார் வாயுக்களின் அக-உராய்வினை (Internal friction) ஆராய்ந்தார். இவருக்கு முன்னேடியாக ஆராய்ந்தவர் மேற்கொண்ட பூர்வாங்க ஆராய்ச்சிகளின் விளைவாக, லாஷ்மிட்டுக்கு அணுவின் பருமனப்பற்றி ஒரு முதற்குறிப்பு கிடைத்தது. இன்னும் அவர் கண்ட முடிவுகள் சரியாகத்தான் இல்லை; ஆயினும், அவர் சென்ற போக்கு நேரிய முறையிலேயே இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாகத்தான் அணுவின் பருமன் சரியான முறையில் அறியப்பெற்றுள்ளது. நூறு இலட்சம் அணுக்களே ஒன்றன் பின் ஒன்ருக வரிசையாக ஒரு நேர்க்கோட்டில் அமைத்தால் அவை ஒரு மில்லி மீட்டர் நீளத்திற்குள்ளேயே அடங்கி விடும். இதிலிருந்து அணு எவ்வளவு சிறியது என்பதை ஒரளவு அறிந்து கொள்கின்ருேமன்ருே? எனவே, தனிப் பட்ட அணுக்கள் முற்றிலும் கண்ணுக்குப் புலகைா: அவற்றை நேரடியாக நாம் காணுவதென்பது இயலாத தொன்று. சாளரத்தின்வழியே காணும் கதிரவன் ஒளியில் காணப்பெறும் நுண்ணிய துகள்களைவிட இவ்வணுக்கள் மிக 47 on afflé'll-Loschmidt. 48 girl Iril. Gudurf-Robert Mayer.