பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக் கொள்கை 25 றது. மிக அண்மையில் மேற்கொண்ட பல அளவுகளின் விளைவாக, இந்தப் பொருண்மை அணுக்களனைத்திலும் மிக இலேசாகவுள்ள ஹைட்ரஜன் அணுவின் பொருண்மையில் கிட்டத்தட்ட 1840-இல் ஒரு பங்கு என்பது தெரியவந்தது. தனித்த நிலையிலுள்ள மின்னுற்றலணுக்கள் எலக்ட்ரான் கள் (Electrons) என்று வழங்கப்பெறுகின்றன; இப்பெயரை முதன் முதலில் இட்டவர் ஸ்டோனி" என்ற அறிவியலறிஞர். அணுத் துகள்கள்: முக்கியமான மெய்ம்மை ஒன்றன இவ்விடத்தில் கருது தல் இன்றியமையாதது. வேதியியல் தனிமங்களின் அணுக் களில் மிக விரிந்த நீலையில் பல்வேறு பொருண்மை அளவுகள் இரு த் த ல் போல் மின்னற்றலனுக்களில் அத்தகைய பொருண்மை அளவுகள் காணப்பெறவில்லை. எலக்ட்ரான் கள் எப்பொழுதுமே ஒரே அளவு பொருண்மையுடன்தான் திகழ்கின்றன. இந்நிலை இயற்கையில் ஒருபடித்தான தன்மை இருக்க வேண்டும் என்ற தேவையுடன் மிகச் சிறந்த முறையில் ஒத்திருப்பது கண்டு மகிழத்தக்கது. ஏதாவது ஒரு முறையில் எலக்ட்ரான்கள் அணுக்களின் பகுதிப் பொருள்களாக இருத்தல்கூடும் என்ற கருத்து அடுத்த ஒரு சில ஆண்டுகளில் படிப்படியாக வளர்ச்சி பெற் றது. ஒரு வியத்தகு மெய்ம்மையும் உள்ளது. அஃது என்ன வென்ருல், எதிர்மின்னற்றலைத்தான் தனித்த நிலையில் எலக்ட்ரான்களாகக் காணக்கூடும்; ஆனல்,நேர்மின்னூட்டம் எப்பொழுதும் பொருள்களின்அணுக்களுடன் உறவுகொண்ட நிலையிலேயே காணப்பெறும். இந்த அனுபவ மெய்ம்மை யில்ை இன்னென்றும் அறியக்கிடக்கின்றது. அஃது என்ன? அணுக்கள் எதிர்மின்னூட்டம் உள்ள எலக்ட்ரான்களை இயை புக் கூறுகளாகக் கொண்டுள்ளன; ஆகவே, ஒர் எலக்ட்ரான் அணுவிலிருந்து அகற்றப்பெற்ருல்தான் எதிர்மின்னூட்ட 50 soG-Iraf-Stoney.