பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 அணுக்கரு பெளதிகம் மும் வெளிப்படையாக மீதுTர்ந்து நிற்கும்; இதனால் இதற் குச் சமபல அளவுள்ள நேர் மின்னுர்ட்டம் எஞ்சியுள்ள அணுப்பகுதியில் பிணைந்து கிடக்கும். ஆனல், ஐம்பது ஆண்டுகட்கு முன்னர் இந்த நிகழ்ச்சிகளைக் குறித்துத் தெளி வான கருத்தினப் பெறுதல் முற்றிலும் இயலாததொன்ருக இருந்தது. இப்பொழுது அணுக்களின் எடைகளை ஏறத் தாழ அறிந்து கொண்டுள்ளோம்; அங்ங்ணமே, அவற்றின் பரிமாணமும் தெரிந்துவிட்டது. இன்னும், அணுக்கள் மின் சாரப் பண்புகளைப் பெற்றுள்ளன என்பதையும் அறிந்து கொண்டோம்; அவை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன என்பதும் புலளுகியுள் ளது. ஆனல், அவற்றின் அமைப்பைப்பற்றி ஒன்றும் தெரிந்தபாடில்லை; அங்ங்னமே, அவற்றின் வடிவத்தைப் பற்றிய வினவும் எழுதற்கே இடமில்லை. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு இருபதாவது நூற்ருண்டிற்கெனவே ஒதுக்கிவிடப் பெற்றுள் ளது. அணுக்கொள்கையின் வரலாற்றைப்பற்றிச் சிந்தனை செய்து கொண்டிருக்கும் நாம் இப்பொழுதுதான் இருப தாவது நூற்றண்டினை எட்டிப் பார்க்கின்ருேம். இந்த வர லாற்றின் அடுத்த பகுதி இந்த நூலின் பொருளுடன் மிக நெருங்கிப் பிணைந்துள்ளது. வரும் இயல்களில் நூல் நுவலும் பொருளைக் காணுங்கால் இவ்வரலாறும் விளக்கம் பெறும்.