பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 அணுக்கரு பெளதிகம் தனித்துகள்களாக நம்மால் காண முடிகின்றது. இந்த உருப் பெருக்கு ஆற்றலே இன்றுள்ளதைவிட இருபது அல்லது முப் பது மடங்கு அதிகரிக்கக் கூடுமானுல்-இது மிகவும் கடின மான பிரச்சினைவே-தனிப்பட்ட நீரின் மூலக்கூறு ஒன்றினை இத்தகைய நுண்பெருக்கியின் மூலம் நாம் தெளிவாகக் காண இயலும், அனுவின் நிலை: ஆளுல், படம்-1இல் காட்டப்பெற்றுள்ள மாதிரி உரு வத்தைப்போல் ஏதாவது பொருளை ஏதாவது ஒரு முறையில் காணமுடியுமா என்பதுதான் முக்கியமான பிரச்சினை. எந்த மூலக்கூறும் அமைதியான நிலையில் இல்லை என்பது ஓரளவு உண்மைதான். வெப்ப நிலையின் செல்வாக்கினுல் அஃது இயங்கிக் கொண்டேயுள்ளது; அதனுடைய பகுதிக் கூறு Job (poplargylb @ušāudsri" (Reciprocal movement) அசைந்து கொண்டேயுள்ளன. எனவே, மூலக் கூறுகளின் §any jostlâû Làojäär (Cinematographic records) argå தால், படம-1இல் காட்டப்பெற்றுள்ளது போன்ற ஒரு நொடிப் படம் (Snapshot) கிடைக்கும். இன்று நாம் பெற் றுள்ள அணுக்கரு பெளதிக அறிவின் காரணமாக இதனை நாம் ஐயுற வேண்டியதில்லை; அதே சமயத்தில் படம்-1இல் காட் டப்பெற்றிருப்பது போன்ற கட்புலனுக்கூடிய மாதிரி உருவங் களையும் நன்கு உணரலாம். எனினும், வெப்ப இயக்கத்தின் (Thermal movement) snUESTuofts, HáSL ul-SSåv Fg மாற்றங்கள் சதா நிகழ்ந்து கொண்டேயிருக்கும். நீரின் மூல்க்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும் ஒர் ஆக்ஸிஜன் அணுவும் மிகச்சரியாக இருப்பதாகப் பெளதிக அறிஞர் எப்படி அறிகின்ருர்? இதற்குப் பதிலாக நான்கு ஹைட்ரஜன் அணுக்களும் இரண்டு ஆக்ஸிஜன் அணுக்களும் இருப்பதாகக் கொண்டாலும் அவை அதே பொருண்மை விகிதத்தைத்தானே உணர்த்துகின்றன? இந்த வினவுக்கு விடை காணவேண்டுமாயின் நாம் திரும்பவும் வாயுக்கள்