பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 4 1 லான சடப்பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடிய இதன் ஆற்றல் இவ்வுலகம் முழுவதையும் வியப்புக் கடலில் ஆழ்த்தியது. கதிரியக்கம் : அடுத்த ஆண்டில், அத்தகைய இயல்புள்ள பிறவகைக் கதிர்களைக் கண்டறிதல் வேண்டும் என்று ஈடுபட்ட முயற்சி யின் விளைவாக ஹென்றி பெக்குரல்" என்பார் சில பொருள் கள்,-முக்கியமாக யுரேனியத்தின் கூட்டுப்பொருள்கள், - இவ்வாறு ஊடுருவிச் செல்லக்கூடிய ஆற்றலுள்ள சில கதிர் களை வெளிவிட்டன என்றும், இவ்வாறு வெளிவிடுதல் புறத் துரண்டுதல் யாதொன்றுமின்றித் தானகவே நடைபெற்றது என்றும் மெய்ப்பித்தார். இந்த நிகழ்ச்சி கதிரியக்கம்’ என்று வழங்கப்பெற்றது; அணுக்களைப்பற்றிய நவீனக் கொள்கையின் வளர்ச்சி முழுவதும் இக் கண்டுபிடிப்பினை யொட்டியே அமைந்துள்ளது. தொடர்ந்தாற்போல் பிற முக்கியமான வளர்ச்சிகளும் ஒன்றன்பின் ஒன்ருக விரைந்தன. 1898-இல் குயூரி தம்பதிகள் யூரேனியத்திலிருந்து மிகத்தீவிர மாகக் கதிர்களை வீசக்கூடிய ஒரு பொருளைப் பிரித்தெடுத் தனர். அப்பொருளின் மிக உறைப்பான கதிரியக்கப் பண்பு' களை யொட்டி அவர்கள் அதனை ரேடியம்' என்று வழங்கினர். ஆங்கிலத்தில் ரேடியம்’ என்பதற்குக் கதிர்களை விடுவது' என்பது பொருள். மூவகைக் கதிர்கள்: ஏறக்குறைய அதே சமயத்தில், நவீன அணு பெளதி கத்தின் தந்தையாகிய எர்னெஸ்டு ரதர்ஃபோர்டு" என்பார் அதன் வளர்ச்சியில் பங்கு கொண்டார். அப் பெருமான 8 @@pair 15 Gl 1õGT ¿-Henri Becquerel. 9 6Tff6076ì»@ org5ffē%@i Inr#@-Ernest Rutherford.