பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 労 3 மின்சாரத்தைச் சுமந்து செல்லுகின்றது; ஒவ்வொரு துகளின் பொருண்மையும் எ ல க் ட் ரா னி ன் பொருண்மைக்குச் சமமானது. அஃதாவது, பீட்டாக் கதிர்கள் விரைந் தியங்கும் எலக்ட்ரான்களாலானவை. இறுதியாக, காமாக் கதிர்கள் பொதுப்பண்புகளில் எகஸ்-கதிர்களை யொத் துள்ளன. வில்சன் முகில் அறை: இக் கதிர்களைக் கண்களினல் இனமறித்து காண்பதற்கு வில்சன்' என்பாரால் சிறந்த முறையொன்று கண்டறியப் பெற்றது. முகில் அறை எனப்படும் அறையொன்றில் நிறை நிலையில் (Saturated) நீராவியைக்கொண்ட காற்று திடீரென விரிவடையச் செய்யப்பெறுகின்றது; அதன் பயனக அது குளிரடைகின்றது; ஆகவே, நீராவி நிறை நிலையை அடைந்து நீராக மாறத் தொடங்குகின்றது; சிறிது நேரம் அது அதிநிறைநிலையிலேயே இருக்கின்றது. இந்தச் சமயத் தில் ஆல்பாத் துகளொன்று அந்த அறையைக் கடந்து சென்ருல், அது தன் வழியிலுள்ள காற்றணுக்களின் எலக்ட் ரான்களைக் கிழித்து எறிந்து விடும்; நேர்மின்ஏற்றம் பெற்ற காற்றின் மூலக்கூறுக ள் அப்படியே நின்றுவிடும். இந்த நேர்மின் ஏற்றம் பெற்ற காற்றின் மூலக்கூறுகள் நேர் அயனி கள் (Positive ions) என்று வழங்கப்பெறுகின்றன. இந்த அயனிகள் அதிநிறை நிலையிலுள்ள நீராவியை மேலும் திரவ நிலைக்குச் சுருங்கச் செய்வதால், அவை நீர்ப்பொருள் நிலை அணுக்கருக்களாக (Condensation nuclei) மாறுகின்றன; அவற்றைச் சுற்றி நீராவி சிறிய துளிகளாகத் திரவ நிலைக்குச் சுருங்குகின்றன. இவ்வாறு, துகளின் பாதை முழுவதும் மிக நுட்பமான நீர்த்துளிகளின் சுவடு ஏற்பட்டு அதன் வழியைக் காட்டும் படம் உண்டாக்கப்பெறுகின்றது. இது மிக உயரத் தில் பறந்து செல்லும் வானவூர்தியின் பின்புறம் உண்டாகும் 14 colò for-Wilson.