பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அணுக்கரு பெளதிகம் “Śrauldstää &@#1%u ports&m 56m' (Condensation bands) போல் காணப்பெறும். இந்த நிகழ்ச்சி படம்-3(a)யிலும் படம்-3(b)யிலும் காட்டப்பெற்றுள்ளது. துகள்களின் சுவடுகள்: கதிரியக்கத் தயாரிப்பு முகில் அறையின் கண்ணுக்குப் புலகுைம் பகுதியில் அடங்கியுள்ளது. தனிப்பட்ட ஆல் பாத் துகள்களின் சுவடுகளை எளிதாகக் காணலாம்; அவை யாவும் கிட்டத்தட்ட ஒரே அளவு நீளமான தொகுதிகளாக அமைகின்றன. படப் 3-(a) இல் வெவ்வேறு வீச்சுகளுள்ள’ இரண்டு தொகுதிகளை எளிதில் காணலாம். படம் 3-(b) யிலுள்ள சுவடுகளில் ஒன்று தெளிவான ஒதுக் கத்தைக் (Sharp deflection) காட்டுகின்றது. ஆல்பாத். துகளுக்கு, சாதாராண நிலையினின்றும் மீறி ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கவேண்டும் என்பது வெளிப்படை அஃது அணு வின் உட்கருவின் அருகில் வந்திருக்க வேண்டும்; அதலுைம் ஒதுக்கப்பெற்றிருத்தல் வேண்டும். ஆயினும், முறைப்படி துகள்கள் ஒரு நேர்க்கோட்டில்தான் இயங்குகின்றன; பெரும் பாலும் அவற்றின் வீச்சும் 2 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை உள்ளது. ஆல்பாத் துகள்கள் ஒரு நேர்க்கோட்டில் நீண்டது.ாரம் செல்லுகின்றன என்பது வியப்படையக் கூடியதொன்று. ஏனெனில், அவை தம்முடைய வழியில் ஏராளமான அணுக் களை மோதிக்கொண்டு செல்லுகின்றன என்பதைக் கணக் கிடுவது எளிதாக அமைகின்றது. அதிகமான நீர்த்துளிகள் உண்டாவதிலிருந்து நாம் பெறக்கூடிய வெளிப்படையான ஊகம் இது. ஆகவே, அணுக்கள் இத்தகைய சிறிய பரும னுள்ள துகள்களால் ஊடுருவிச் செல்லக் கூடியவை அன்று என்று ஏற்படுகின்றது; ஆயினும், உண்மையில் இத் துகள்கள் யாதொரு தடையுமின்றி அணுக்களைத் துளைத்துச்செல்லக் கூடியவையே. எனவே, அவை தம்முடைய வழியில்