பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 4莎 யாதொரு தீவிரமான தடையையும் எதிர்த்துச் செல்வ தில்லை; ஆனால், அவை அத்தகைய தடையைச் சந்திக்க நேரிட்டால், அவற்றின் சுவடுகள் நாம் படம்-3 (a)யில் காண் கின்றதுபோல் அத்தகைய ஒதுக்கங்களைக் காட்டும். அணுவின் அமைப்பு: இன்னும் சற்று முன்னதாகவே லெனர்டு" என்பார் சடப்பொருளின் வழியாக வேகமாக இயங்கிச் செல்லும் எலக்ட்ரான்களின் போக்கை ஆராய்ந்து, அவை அளவு மீறித் தடித்த அடுக்குகளைக் கொண்ட சடப்பொருளையும் ஊடுருவிச் செல்லக் கூடியவை என்று கண்டறிந்தார். ஆகவே, ஓர் அணு அடைத்துக் கொண்டுள்ள வெளி பெரும் பாலும் வெறுமையாகவே இருக்கவேண்டும் என்றும், ஒர் எலக்ட்ரான் செல்லும் வழி தனிப்பட்ட விசையின் நடு மையங்களால் பாதிக்கப்பெறுகின்றது என்றும் ஒர் முடிவுக்கு வந்தார். இந்த நடுமையங்களை அவர் "டைனமைட்ஸ்" என்று வழங்கினர். இத்தகைய ஆராய்ச்சியின் விளைவாக ரதர்ஃபோர்டு என்பார் அணுவின் மாதிரி உருவத்தை முதன் முதலாக அமைப்பதில் ஈடுபட்டார். அவர் மெல்லிய உலோ கத் தகடுவழியாக ஆல்பாத் துகள்கள் செல்லும் சுவடுகளை ஆராய்ந்து மிகக் குறைவான தெளிவான ஒதுக்கங்களின் அடிப்படையில், அணுவின் மிகச்சிறிய பகுதியே ஆல்பாத் துகள்களுக்குத் தடையை உண்டாக்கியது என்றும், மிகவும் சிறிதாகவுள்ள இப்பகுதியில்தான் அணுவின் பொருண்மை முழுவதும் அடங்கியுள்ளது என்றும் முடிவுக்கு வந்தார். இம் முடிவு சரியில்லை என்பதாயின் நிலை மீட்புத் தாக்குதல்கள் (Elastic impacts)பற்றிய விதிகள் சில சமயம் கண்ணுல் காணக்கூடிய ஏராளமான ஒதுக்கங்கள் நிகழ்வதைச் சாத்தி யப்படாது செய்து விடும். தம்முடைய சோதனைகளின் 15 Gau(69ff(S)-Lenard. 16 Gol-ewroubt -ów-Dynamides.