பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 而葛 கருத்தினைப்போல் அப்படியே ஏற்றுக் கொள்ளக் முடியா தெனவும் கண்டறிவதால் அது சிறிதும் நம்மைத் திகைக்கும் படி செய்யாது. கட்புல விளக்கம் கட்புலளுவதற்கு விளக்கம் தருவதில் கூறப்பெற்ற கட் டுப்பாடுகளை குவாண்டம் கொள்கை (Quantum theory)யின் அடிப்படையிலமைந்த நிச்சயமின்மை தத்துவம் (Uncertainty principle) என்ற உறவு முறையினைத் துணைக்கொண்டு மிகத் திட்டமான வாய்பாடாக அமைத்தல் கூடும். அதனை அடி யிற்கண்டவாறு மிக எளிய முறையில் கூறலாம்: எவரும் ஒரே சமயத்தில் மிகத் திருத்தமான முறையில் மிகச்சிறிதாகவுள்ள துகள்களில் ஒன்றன் இயக்கத்தை அறுதியிடக்கூடிய இரண்டு முக்கியமான கூறுகளைத்-அஃதாவது துகளின் இருப்பிடம், அதன் நேர் வேகம்-தெரிந்து கொள்ள முடியாது. ஒரே கணத்தில் ஒரு துகளின் இருப்பிடத்தையும் அது செல்லும் திசையையும் வேகத்தையும் மிகத் திருத்தமான முறையில் அறுதியிடுவதென்பது மிகவும் இயலாத தொன்று. ஒரு குறிப் பிட்ட கணத்தில் அதன் சரியான இருப்பிடத்தைச் சோதனை மூலம் நாம் அறுதியிட்டால், அதே சோதனையால் அதன் இருப்பிடம் மிகவும் நிலைகுலைந்து அதனைக் காண முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதற்கு மாமுக ஒரு துகளின் நேர்வேகத்தை மிகத் திட்டமான முறையில் அளக்கும் பொழுது, அத்துகளின் இருப்பிடத்தின் படம் முற்றிலும் மங்கலாகி விடுகின்றது. ஆயினும், இந்தக் கூற்றினல் ஒரு வளர்ச்சியின் உச்சநிலை யினை எதிர்பார்த்தேன்; இப்பொழுது ஆதி நிலையிலிருந்தே அதனை விவரிக்க முற்படுகின்றேன். அணுவின் மாதிரி உருவத்தின் சில பண்புகள்: கட்புலனாகும் படத்தில் நேரிடக்கூடிய சங்கடங்களைத் தவிர, அணுவின் மாதிரி உருவம் சில பண்புகளைப் பெற்றுள் ளன; அப்பண்புகள் நடைமுறை அனுபவத்துடன் பொருந்து