பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அணுக்கரு பெளதிகம் ஒன்றன்பின் ஒன்ருகத் தொடர்ந்தாற்போல் பேரெண்ணிக் கையில் எடுக்கப்பெற்ருல், அணுக்கருவிலிருந்து அதிக தூரம் அல்லது குறைந்த தூரத்தில் எலக்ட்ரான் பல்வேறு இடங் களில் காணப்பெறும்; அஃது ஓரிடத்தில் அதிகமாகவும் பிறி தோரிடத்தில் மிகக் குறைவாகவும் காணப்பெறும். இவ்வாறு அணுக்கருவின் அருகில் எலக்ட்ரானை ஏதாவது ஓரிடத்தில் அல்லது மற்ருே.ரிடத்தில் காணக்கூடிய பொதுவான ஒரு முழுப் படத்தை அடையலாம்; எலக்ட்ரான்கள் வினியோகிக் கப் பெற்றிருக்கும் இதனை ஏற்பு மதிப்பு (Probability value) என்று வழங்குவர். ஆனல், தொகுதியாக அமைத்த இந்த ஒளிப்படப் பதிவுகள் யாவும்- ஒரே கணத்தில் சேகரஞ் செய்யப்பெற்றதால்-அணுக்கருவின் அருகில் மின்சாரச் செறிவின் சராசரி வினியோகத்தைக் காட்டும் படம் என்றும் இவை கருதப்பெறலாம். இத்தகைய செறிவு வினியோகம் ஒரு விதத்தில் அலை நிகழ்ச்சியுடன், அஃதாவது ஒர் அலேயு டன், ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியதாகும். எதிர்மின் ஏற்றம் பெற்ற சடப்பொருளின் நிலையான அலைகளைக் கற்பித்துக் கொண்டால், இவையும் இந்தச் சடப் பொருளின் ஒரு குறிப் பிட்ட செறிவு வினியோகத்துடன் பொருந்துவதாக இருக் கும். உண்மையில் ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள அலைகளின் வீச்சின் (Amplitude) மடக்கெண் (வாக்கம்) அந்த இடத்தி லுள்ள பொருளின் செறிவினை உணர்த்துகின்றது என்று டி பிராக்வியின் சடப் பொருள் அலைகளை விளக்கி வைக்கலாம். ஆளுல், கணப்பொழுதில் எடுத்த நொடிப்படம் ஒன்றில் எலக்ட்ரான் அதே இடத்தில் கண்டறியப்பெறும் என்ற நிலை யையும் அஃது உணர்த்துகின்றது என்றும் நாம் கூறலாம். அணுக்கருவின் மிக அருகிலுள்ள இந்த நிலையான அலைகள் ஷரோடிங்கர்' என்ற அறிஞரால் ஆராயப்பெற்றன; உண் மையில், அவை அவருடைய அல்ப் பொறிநுட்பவியலின் நோக்கத்தினைக் குறிப்பிடுகின்றன. அன்றியும். இந்த நிலை யான அலைகள் அணுக்கருவின் அருகிலுள்ள மின்சாரத்தின் 25 oritiqtālārī-Schrodinger.