பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 & அணுக்கரு பெளதிகம் (iii) தனிமங்களின் ஆவர்த்த அமைப்பு அனு-எண்வரிசையில் தனிமங்களின் அமைப்பு: இனி, நாம் தனிமங்களின் வேதியியற் பண்புகளுக்கும் அணுக்களின் உட்கருவின் புறத்தேயுள்ள பகுதிகளின் அமைப்புக்கும்-அஃதாவது கோள்நிலை எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கும்-உள்ள தொடர்புமுறைபற்றிய பிரச் சினேக்கு வருகின்ருேம்; இதிலிருந்து இறுதியாக அணுக் களின் மின்னூட்டங்களைப்பற்றியும் அறிந்து கொள்ளப் போகின்ருேம். இந்த உறவுமுறையைப் புரிந்து கொள்வதில் நாம் போரின் கொள்கைக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளோம்; தனிமங்களை அவற்றின் அணுக்கரு மின்னூட்டங்களின் அளவுக்கேற்றவாறு, அஃதாவது அவற்றின் அணு-எண்களுக் கேற்றவாறு, முறையாக அமைத்துக்கொண்டு இந்த உறவு முறை பற்றிய பொதுவான கருத்தைத் திருப்தியான முறையில் அடையலாம்: இந்த அணு-எண்கள் முறையே அத்தனிமங்களின் அணுக்கருக்களில் உள்ள நேர் மின்சாரத் தின் அடிப்படைக் குவாண்ட எண்களுடன் முழுதும் ஒத் துள்ளன (இந்நூலின் இறுதியிலுள்ள அட்டவணை-II ஐப் பார்க்க). எனவே, நாம் ஹைட்ரஜனில் (1) தொடங்கி, ஹாலியத்தைத் (2) தொடர்ந்து, குயூரியத்தை (96) அடை யும்வரை இவ்வாறு செல்லுகின்ருேம்." தனிமங்களை அணு. எண்களின் வரிசை முறைப்படி அமைத்தால், அவற்றின் வேதியியற் பண்புகள் திரும்பத்திரும்ப வரும் முறையில் (Repeat) அமைகின்றன என்ற உண்மையைச் சற்றேறக் குறைய நூருண்டுகளாக வேதியியற் புலவர்கள் அறிந்திருந் தனர். இவ்வாறு திரும்பத்திரும்பக் கூறும் முறை அமையும் இடங்களில் இந்த வரிசை முறையை விட்டுப் புதிய வரிசை முறையைத் தொடங்கினல் நாம் எல்லோரும் அறிந்த,

  • இன்று நொபீலியம் (103) வரையிலும் மேலும் ஏழு தனிமங்கள் கண்டறியப்பெற்றுள்ளன. அதற்கடுத்த தனிமம் (104) இன்னும் பெயரிடப்பெறவில்லை.