பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் & ვ நியூலண்ட்ஸ்", மெண்டெலீப்", மேயர்" ஆகியோர் கண்ட "தனிமங்களின் ஆவர்த்த அமைப்பை அடைகின்ருேம் (இந்நூலின் இறுதியிலுள்ள அட்டவணை-IIIஐப் பார்க்க). போர் கூறுகின்றபடி, அணுக்கொள்கையின் அடிப்படையில் தனிமங்களின் இந்த ஆவர்த்த முறையை அடியிற் கண்ட வாறு விளக்குதல் கூடும்: எலக்ட்ரான்களின் அமைப்பு: பாலி" என்பாரால் முறைப்படுத்தப்பெற்ற ஒரு விதிப் படி, ஓர் அயனப்பாதைல் ஒன்றுக்கு மேற்பட்ட எலக்ட்ரான் கள் ஒரே குவாண்டம் நிலையில் இருக்கமுடியாது. மெய்ப்பிப்பு இன்றி அவ்விதியை இங்கு எடுத்துக் கூறலாம். ஆகவே, ஓர் அணு பல எலக்ட்ரான்களைப் பெற்றிருந்தால், முதல் எலக்ட் ரானுக்கு அடுத்துள்ள எலக்ட்ரான்கள் வெளிப்புறமாக அமைந்துள்ள பல அயனப்பாதைகளில் இடம்பெற்றிருக்கும். இத்தகைய பிரச்சினைகளை ஆராயுங்கால், முற்றுப்பெற்ற அணுவைக் கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும்; அதற்குப் பதிலாக அணுக்கருவிலிந்து வெளிப்புறமாக நோக் கிச் செல்லவேண்டும்; ஒரு குறிப்பிட்ட தனிமத்திற்குரிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கை முற்றுப்பெறும் வரையிலும் நடு விடத்திலிருந்து எலக்ட்ரான்கள் ஒன்றன்பின் ஒன்ருக சேர்க்கப்பெறுகின்றன என்றும் கற்பனை செய்து கொள்ள iேண்டும். பல்வேறு கூடுகள்: இந்த அமைப்பு விதிப்படி தனிப்பட்ட எலக்ட்ரான்களே ஒன்றன் பின் ஒன்ருகச் சேர்ப்பதைத் தொடர்ந்து நாம் மேற்கொண்டால், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு 26. Églovsån Leib-Newlands. 27. GupaśrøLajo-Mendelejeff. 28. Guouis-Mayer. 29. Lurrgo - Pauli.