பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அணுக்கரு பெளதிகம் எலக்ட்ரான்களைச் சேர்த்த பிறகு, இந்த எலக்ட்ரான்கள் முக்கியமாக ஒரு முற்றுப்பெற்ற அமைப்பாக மாறுகின்றன என்பதைக் காண்கின்ருேம்; மீண்டும் எலக்ட்ரான்களைச் சேர்த்தால் அணுக்கருவிலிருந்து மிகத் தொலைவில் ஒரு புதிய அமைப்பு தொடங்குகின்றது என்பதையும் அறிகின்ருேம். அணுக்கருவிற்குப் புறத்தேயுள்ள அணுவின் எலக்ட்ரான் அமைப்பு பல தனிப்பட்ட கூடுகள் (Shells) அடங்கியுள்ள ஒர் அமைப்பு என்று சொல்லப்பெறுகின்றது. இவ்வாறு முற்றுப்பெற்ற ஒரு கூட்டுடன் கூடிய அணுக்கருவின் புற அமைப்பைக் கொண்ட வேதியியல் தனிமங்கள் குறிப்பிடத் தக்க சிறப்பினைப் பெற்றுள்ளன. இவைதாம் சுறுசுறுப் பற்ற கூட்டத்தைச் சேர்ந்த எவற்றுடனும் எதிர்வினை கொள்ளா மந்த வாயுக்கள். இவற்றுள் முதலாவதாகவுள்ள عي {u} படம்-3: (ஏ) ஹீலிய அணுவின் மாதிரி உருவம்; (பி) லிதிய அணுவின் மாதிரி உருவம். ஹீலியத்தைத் துகள் கூறின் மூலம் கிட்டத்தட்ட சமமான, துரத்தில் தன்னைச் சுற்றி வரும் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்ட ஒர் அணுக்கருவாகக் கருதலாம் (படம் 8 (a). எனவே, முதற் கூடு ஏற்கெனவே இரண்டு எலக்ட்ரான் களால் முற்றுப்பெற்றுவிட்டது. அடுத்த தனிமம் லிதியம் என்பது; அதில் ஓர் எலக்ட்ரான் அதிகமாக உள்ளது; இந்த மூன்ருவது எலக்ட்ரான் இன்னும் சற்று வெளிப்புறமாகவுள்ள அயனப் பாதையில் ஒரு புதிய கூட்டில் தனிமையாகச் சுற்றிக் கொண்டுள்ளது (படம்-8 (b)). இந்த அணு மிக எளிதாக