பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 6荡 ஒர் எலக்ட்ரானை விட்டுவிடும் என்பது வெளிப்படை, ஆகவே அது நேர் மின் ஏற்றம் பெற்ற அயனியாக அடிக்கடி காணப் பெறுகின்றது. லிதியம் நேர் மின்சாரப் பண்புடன் காணப் பெறுவதற்கு இதுவே விளக்கமாகும்; இத் தனிமத்தின் வேதியியல் பண்புகளில் இதுவே மிகவும் முக்கியமான சிறப் பியல்பாகும். மந்த வாயுக்கள்: இம்முறையில் மேலும் மேலும் தனிமங்கள் அமைந் துள்ளன. ஒரு சில தனிமங்களுக்குப் பிறகு ஹீலியத்தைப் போலவே ஒரு முற்றுப்பெற்ற கூட்டினை நாம் சதா காண் கின்ருேம். இந்த மெய்ம்மையின் அடிப்படையில் அமைந் துள்ள சிறப்பியல்பு யாதெனில், இந்தத் தனிமங்கள்"ஹீலியம், நியான், ஆர்கான், கிரிப்டான், ஜெனன் என்ற மந்த வாயுக்கள்-வேதியியல்முறையில் எதிர்வினைகொள்ளா. அவை யாவும் ஓர் எல்லேயின் முடிவையே குறிப்பிடுகின்றன; இஃது இந்நூலின் இறுதியிலுள்ள அட்டவணை-III-இல் காட்டப்பெற்றுள்ளது. இரண்டாவது கூடு: ஏற்கெனவே நாம் குறிப்பிட்டவாறு, முதல் எல்லைக்குள் ஹைட்ரஜன், ஹீலியம் என்ற இரண்டு தனிமங்கள் அடங்கி புள்ளன. இரண்டாவது எல்லைக்குள் (வட்டத்தில்) லிதியம், பெரிலியம், போரான், கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், ஃபுளோரின், நியான் என்ற எட்டுத் தனிமங்கள் உள்ளன. ஃபுளோரின் என்ற தனிமத்தின் வெளிப்புற வட்டத்தில் ஏழு தமிழ் மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு: 30 ஹீலியம் - சூரியனிடமிருப்பது: நியான் - புதியன்; ஆர்கான் - சோம்பேறி: கிரிப்டான் - மறைந்தான்: ஜெனன். அயலான்-என்று பொருள்படுவதை அறிக. அ-5