பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 அணுக்கரு பெளதிகம் டாவதாக அணுவின் வேதியியற் பண்புகள் அதன் உட்கருவி லிருக்கும் அடிப்படை மின்னூட்டங்களின் எண்ணிக்கையைப் பொறுத்துள்ளன் என்றும் இன்றைய நம்முடைய அறிவினைக் கொண்டு ரதர்ஃபோர்டு-சாடியின் கண்டுபிடிப்பினை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆல்பத் துகள்களும் பீட்டாத் துகள் களும் அணுவின் உட்கருவில் தோன்றுகின்றனவேயன்றி அதன் புறத்தமைப்பில் தோன்றுவதில்லை. ஆல்பாத் துகள் கள் என்பவை ஹீலியத்தின் உட்கருக்களாகும்; அவற்றின் பொருண்மையாலும் மின்னுாட்டத்தாலும் அவை அப்படிப் பட்டவை என்று இனங்காணப்பெற்றன. அவற்றின் பொருண்மை 4 அனுப் பொருண்மை அலகுகள்; அவை இரண்டு அடிப்படை மின்னூட்டங்களைச் சுமந்து செல்லுகின் றன. இதனை நாம் அவற்றின் பொருண்மை-எண்-4 என் றும், அவற்றின் அணு-எண்-2 என்றும் சுருக்கமாகக்குறிப் பிடுகின்ருேம். இதன் அடிப்படையில் ஹீலிய அணு He' என்ற குறியீட்டால் குறிப்பிடப்பெறுகின்றது; இதில் வலப் புறத்தின் மேலுள்ள எண் பொருண்மை.எண்ணையும் இடப் புறத்தின் கீழுள்ள எண் அணு-எண்ணையும் உணர்த்துகின்றன. இத்தகைய குறியீட்டுமுறை எல்லாத் தனிமங்களின் அணுக் களுக்கும் மேற்கொள்ளப்பெறுகின்றது. ஆல்பாத் துகள் ஒன்று ஓர் அணுவின் உட்கருவினின்றும் வெளியேற்றப்பெற் ருல் அது தனது பொருண்மையுடன் தனக்குரிய மின்னூட் டத்தையும் சுமந்தே செல்லும், அணுக்கரு இந்தப் பொருண் மையையும் மின்னூட்டத்தையும் இழக்கின்றது; அதனுடைய அணு-எண்ணில் (அதிலுள்ள அடிப்படை மின்சாரக் குவாண்ட எண்ணிக்கையில்) 2 குறைகின்றது; அதனல், பொருண்மை - எண்ணிலும் 4 குறைகின்றது, ஆயின், ஒரு பீட்டாத் துகள் எதிர் மின் ஏற்றமுள்ள ஓர் எலக்ட்ரான் ஆகும். அதனுடைய பொருண்மை. எண் கிட்டத்தட்ட 0. அதன் அணு-எண் 1. எனவே, பொதுவாக e என்பது "எலக்ட் ரானை உணர்த்தினல், எதிர் மின் ஏற்றமுள்ள எலக்ட்ரானின் குறியீட்டை-le என்று எழுதிக் காட்டலாம். ஆகவே, ஓர் எலக்ட்ரான் வெளிவிடப்பெறுங்கால் அணுக்கருவின் எடை