பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் 73 காண்கின்ருேம், காற்றில் பல்வேறு கதிரியக்கப்பொருள் களின் ஆல்பாத் துகள்களின் வீச்சு 1 செ. மீ. க்கும் 9 செ. மீ. க்கும் இடையில் அமைகின்றது; இவ்வீச்சு அணுக்கருவி லிருந்து துகள்கள் வெளிவருங்கால் அவை பெற்றுள்ள ஆற்ற லேப் பொறுத்துள்ளது. ஆற்றல் அதிகமாக இருந்தால் வீச் சும் நீளமாகும். பல்வேறு கதிரியக்கப் பொருள்களும் தம்முடைய மாற்ற வேகங்களில் அதிக வேற்றுமைகளைக் காட்டுகின்றன. இப் பொருள்களில் சில குறுகிய ஆயுளையுடையவை; ஏனையவை அதிக நாட்கள் நீடித்திருக்கக்கூடியவை; நீண்ட காலத்திற்குப் பிறகும் இவற்றின் கதிரியக்கத்தில் குறைவைக் காண இய லாது. ஒவ்வொரு கதிரிக்கப் பொருளின் அணுக்களுக்கும் கதிரியக்கமுறையில் சிதைந்தழிதலில் ஓர் ஏற்பு நிலை (Probability) உண்டு; அதனை எண்ணுல் குறிப்பிடலாம். இந்த ஏற்பு நிலையின் தலைகீழ்ப் பின்னந்தான் அந்தப் பொரு வளின் சராசரி வாழ்வு’ (Average life) என்பது. சிதைந்தழி தலின் ஏற்பு நிலை,-ஆகவே, அதன் சராசரி வாழ்வு-ஏற் கெனவே சிதைந்தழிந்த அணுக்களின் எண்ணிக்கையைப் பொறுத்ததன்று. இன்னும் கட்டுக்கோப்பில் அமைந்துள்ள அணுக்களின் எண்ணிக்கையின் அதே சத வீதம் ஒரு மூல அளவு காலத்தில் சிதைந்தழியும் என்ருகின்றது. இந்த விதி அடியிற்கண்ட சமன்பாட்டினுல் உணர்த்தப்பெறுகின்றது: dN= - Á Ndt இதிலிருந்து N= Noe- என்பது பெறப்படுகின்றது. இதில் No என்பது, காலம் t = 0 ஆக இருக்கும்பொழுது கட்டுக்கோப்பாக (Intact) இருக்கும் அணுக்களின் எண் னிக்கை; N என்பது t என்ற கால அளவில் கட்டுக்கோப்பாக உள்ள அணுக்களின் எண்ணிக்கை; e என்பது இயற்கை மடக் sosu^sör (Natural logarithm) Sug-; Á sTsörugl SEM G5Sgó) தலின் ஏற்பு நிலை; ஆகவே, 11A என்பது சராசரி வாழ்வு' ஆகின்றது. இந்தச் சராசரி வாழ்வுக்குப் பதிலாக அரைவாழ்வு T என்பதை (மொத்த அணுக்களில் சரியாக ஒரு பாதி