பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 அணுக்கரு பெளதிகம் அணுக்கள் அழியும் காலம்) அடிக்கடி பயன்படுத்துகின் றனர். அரை-வாழ்வு’, ‘சராசரி வாழ்வை’க் காட்டிலும் சிறிது குறைவாகவுள்ளது. அது சராசரி வாழ்விலிருந்து 2-இன் இயற்கை மடக்கைக் காரணியால் (log nat. 2) வேறு படுகின்றது. (நாம் t= log nat2 என்று எழுதினல், N = No x e-lo n = N என்று ஆகின்றது. இந்த விதி ஆல்பாக் கதிர்வீசலுக்கும் பீட்டாக் கதிர்வீசலுக்கும் பொருந்துகின்றது. எனவே, ஓர் ஒருபடித்தான பொருளின் கதிரியக்கக் பண்புகள் முக்கியமாக இரண்டு கூறுகளால் அறுதியிடப் பெறுகின்றன. அவை : ஒன்று, வெளியிடப்ப்ெறும் துகள் களின் தன்மை; மற்றென்று, அப்பொருளின் சராசரி வாழ்வு அல்லது அரை-வாழ்வு. காமாக் கதிர்களின் ஆற்றல் : காமாக்கதிர்கள் எடுத்துக்கொள்ளும் பங்கு ஒரு வகை யில் வேறு விதமானது. இயற்கைக் கதிரியக்கத்தில் காமாக் கதிர்கள் மட்டிலும் தனியாகத் தோன்றுவதில்லையென்பதை யும், அவை ஏனைய இரண்டு வகைக் கதிர்வீசல்களில் ஏதா வது ஒன்றுடன் கலந்தே காணப்படும் என்பதையும் நாம் முதலிலேயே குறிப்பிட்டாக வேண்டும். காமாக்கதிர்கள் எக்ஸ் கதிர்களை விடவும்(இவற்றுடன் அவை வேறு கூறுகளில் சிறப்பாக ஒற்றுமையுடையவை) அல்லது ஆல்பாக் கதிர்களை விடவும் பீட்டாக் கதிர்களை விடவும் அதிகமான துளைத்துச் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளன. அவற்றின் துளைத்துச் செல்லும் ஆற்றலைப்பற்றி ஒரளவு சரியான கருத்தினை உணர்த்தவேண்டுமானல் இவ்வாறு கூறலாம் : ஒர் ஆல்பாக் கதிரை ஒரு காகிதம் உறிஞ்சிவிடும்; ஆனால் ஒரு பீட்டாக் கதிரை உறிஞ்சுவதற்கு அத்தகைய காகிதங்கள் 100 வேண் டும்; காமாக் கதிர்வீசலை உறிஞ்சுவதற்குப் பல தடித்த