பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அணுவின் ஆக்கம்

ஓர் உலோகம், நம்முடைய பூமி குளிர்ந்துகொண்டே வரு கிறது என்பது நாம் பூகோள வகுப்பில் படித்தபாடம். அங்ங்ணம் குளிர்ந்துகொண்டே வந்தால் பூமி ஒரு காலத்தில் சந்திரனேப்போல் குளிர்ந்து உயிர்கள் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லாது போய்விடும். ஆளுல், நல்லகாலமாக அங்ங்னம் குளிராதபடி வேருெரு முறையில் சூடு இயற்றப்படுகிறது. என்பதை அறிவியலறிஞர்கள் கண்டனர். இதனே மேலும் ஆராய்ந்தவர்கள் யுரேனிய அணு சிதைந்து வருவதால் வெளியிடப்பெறும் சூடுதான் அது என்பது அவர்கள் கருத்திற்கு எட்டியது. பூமி குளிர்ந்து வருவதால் ஏற்படும் குறைவினை யுரேனியம் வெளிவிடும் சூடு நிறைவு செய்கிறது என்பது அவர்கள் யூகம். பூமி குளிர்ந்துவரும் கணக்கி லிருந்து அதனே ஈடுசெய்ய பூமியில் 8 X 10 டன் யுரேனியம் உலகில் இருக்கவேண்டும் என்பது சிலருடைய கொள்கை. அதற்குமேல் இருந்தால் அதிலிருந்து வரும் சூட்டினல் பூமி வெடித்துப்போய்விடும் என்பது அவர்களுடைய கருத்து. இன்னும் சிலர் பூமியின் மேலோட்டில் ஒருமைல் ஆழத்திற். குள் 10 டன் (100,000) யுரேனியம் கிடைக்கலாம் என்று கூறுகின்றனர். இன்று யுரேனியம் பூமியில் 250,000ல் ஒருபங்கு இருப்பதாக மதிப்பிடப்பெற் றிருக்கின்றது. அப் படியானுல் யுரேனியம் காரீயத்தைப் போலவோ, அல்லது துத்தநாகத்தைப் போலவோ அதிகமாக இருக்கிறது என்று கொள்ளலாம் ; வெள்ளியைவிட நூறுமடங்கு அதிகமாகவும் இருக்கிறது என்பது வெளிப்படை. இவற்றைத் தவிர, ஒவ் வொரு கன மைல் கடல் நீரிலும் ஐந்து டன் யுரேனியம் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர். கணிப்பொருளிலோ பிறவற்றிலோ யுரேனியத்தின் அளவு 0.1 சதவிகிதத்திற்குக் குறைவாக இருந்தால் அதைப் பிரித்தெடுப்பதற்கு அதிகச் செலவாகும். எனினும், யுரேனியத்தின் படிவுகள் பரந்து கிடப்பதிலிருந்து அதிக அடர்வுள்ள" யுரேனியப் படிவுகள் எதிர்பாராத இடங்களிலும் அதிக அளவுகளிலும் கண்டறியப் பெறுதல் கூடும்.

  • 15 fiéQā9äää - extraction. * *Lisu - concentra tion