பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

அணுவின் ஆக்கம்


பச்சை நிறமுள்ள பொடியாகும் ; ' பச்சை உப்பு'35 என்று வழங்கப்படுவது.

பச்சை உப்பிலிருந்து யுரேனியத்தைப் பிரித்தெடுப்பது தான் மூன்றாவது நிலையில் நடைபெறுவது. இவ்வாறு பிரித்தெடுக்கப் பெறும் யுரேனியம் பளபளப்பான, கெட்டியான, திண்மைமிக்க உலோகமாகும். ஒரு கன அங்குலமளவு உலோகம் இராத்தல் எடை இருக்கும்; காரீயத்தைவிட 50 சத விகிதம் அதிகக் கனமுள்ளது. காற்றிலிருக்கும் பொழுது அதில் சாம்பல் நிறமுள்ள துருப்பிடித்தாலும், அது தோற் றத்தில் நிக்கலைப் போலவே காணப்படுகின்றது. இந்த யுரேனியம் நீண்ட குச்சுகளாக உருட்டப் பெற்று ஒவ்வொன்றும் நான்கு இராத்தல் எடையுள்ளதும் நான்கு அங்குல நீளமுள்ளதுமான துண்டுகளாக வெட்டப் பெறுகின்றது. இத் துண்டுகள் இறுக்கமான அலுமினியச் சிமிழ்களில் அடைக்கப் பெற்று காற்று படாதவாறு பாதுகாக்கப் பெறுகின்றன. இந்நிலையிலிருக்கும் யுரேனியம்தான் அணு உலேக்கு ஏற்ற பொருளாக இருக்கின்றது.

ஓரிடத்தான்கள் பிரிவு : இவ்வாறு பிரித்தெடுக்கப் பெறும் யுரேனியத்தில் யு-238, யு-235 என்ற இரண்டு யுரேனிய ஓரிடத்தான்கள் கலந்திருக்கின்றன. யு-235 தான் தொடர் நிலை விளைவை உண்டாக்க வல்லது என்பது நமக்குத் தெரி யும். கலவையைப் பிரித்துத் துாய்மையான யு-235 ஐ உண்டாக்க வேண்டுமானால், மேலே குறிப்பிட்ட பச்சை உப்பிலிருந்து இக்கிரியையைத் தொடங்க வேண்டும். பச்சை உப்பில் மீண்டும் அதிகமான புளோரினைச் செலுத்தினால் அது யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடாக36 மாற்றப் பெறுகின்றது. யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடின் ஒவ்வொரு அணுத் திரளையிலும் ஆறு புளோரின் அணுக்கள் உள்ளன. யுரேனியத்தின் இந்தச் சேர்க்கைப் பொருளை மட்டிலுந்தான் வாயு நிலைக்கு மாற்றக்கூடும். வாயுநிலையில் வைத்துதான்


35பச்சை உப்பு - green salt. 36யுரேனியம் ஹெக்ஸாபுளோரைடு - uranium hexafluoride.