பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு உலைகள்

5

கும், யுரேனியம் அதில் எரியையாகப் பயன்படுகிறது; முதன் முதலில் நேரடியாக வெளிப்படும் பொருள் நீராவியாகும். ஓர் உலேக்கும் இந்தச் சாதனத்திற்கும் ஒரு வேற்றுமை உண்டு. இச்சாதனத்திற்குக் காற்று தேவையில்லை ; எனவே, இது ஒரு கப்பி[1]யினுள் அல்லது நீரினுள் பல ஆண்டுகள் இயங்க வல்லது. ஓர் அணு உலையினுள் பக்குவிடும் எரியையை நிரப்பிவிட்டால் அது தானாகவே இயங்கும். நமக்குத் தேவையான அளவு ஆற்றலைப் பெறுவதற்கேற்றவாறு அதனைக் கட்டுப்படுத்த வேண்டியது ஒன்றே நாம் செய்யவேண்டியது.

அணு உலைகளில் பலவகை உண்டு; ஒவ்வொன்றும் வெவ்வேறு செயல்களுக்காக நிறுவப்பெறுபவை. இன்று பல்வேறு நாடுகளிலும் முப்பதிற்கு மேற்பட்ட அணு உலைகள் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. அவற்றுள் இரண்டில் மட்டிலுந்தான் மின்னாற்றலைமட்டிலும் உண்டாக்குவதற்காக அமைந்துள்ளன. ஒன்று, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றில் இயங்குவது; மற்றொன்று சோவியத் ரஷ்யாவில் ஒரு சிறிய மின்னுற்றல் உற்பத்தி நிலையத்தில் இயங்குவது. ஏனையவையாவும் சூட்டினேயே உற்பத்தி செய்கிறது; இந்தச் சூடு மின்னாற்றல் உற்பத்திக்கு பூர்வாங்க படியாக இருக்கின்றது.

அணு உலையில் அணுப்பிளவு நிகழ்கிறது ; கட்டுப் படுத்தப்பெற்ற நிலைகளில், பொது இயல் மின்னிகள் விடுவிக்கப் பெறுகின்றன; தீவிரமான சூட்டுடன்கூடிய கதிர்கள் வீசப்பெறுகின்றன. ஓர் அணு உலையின் இன்றியமையாத பகுதிகள் உள்ளகம், தணிப்பான், கட்டுப்படுத்தும் குச்சிகள், குளிர்ப்பான், காப்புறை என்பவையாகும். (படம் 16.)

உள்ளகம்[2] : இது ஒர் அணு உலையின் நடுப்பகுதியில்அதன் இதயத்தில்-இருப்பது. இது ஒரு சிறு பகுதிதான்; ஆளுல், மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் பகுதி. இதில்தான் பக்குவிடக்கூடிய யு-235 அல்லது புளுட்டோனியம் இருக்-


  1. கப்பி - concrete
  2. உள்ளகம் - core.