பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அணுவின் ஆக்கம்


 றும் வெளியாகும் பொது இயல் மின்னிகளைக் களவாடிட - விழுங்கி-வேறு யுரேனியக் கருக்களைத் தாக்காதபடி செய்து விடுவதோடன்றி மேலும் கிரியை நடைபெறாதபடியும், தடுத்துவிடுகின்றன. அவற்றைப் படிப்படியாக உள்ளகத்தினின்றும் நீக்கினால் தொடர்நிலை விளைவு தொடங்கி அதற்கு ஒருவேகமும் படிப்படியாக ஏற்பட்டுவிடுகின்றது. காட்மியம் கோல்களைச் சரிப்படுத்தி அவ்வியக்கத்தை நாம் விரும்பும் நிலையில் வைக்கலாம் ; அல்லது அவற்றை முழுவதும் உள்ளுக்குள் செலுத்தித் திடீரென்று அதனை நிறுத்திவிடவும் செய்யலாம். பாதுகாப்பாக இருப்பதற்குக் கட்டுப்படுத்தும் கோல்கள் சில கருவிகளால் தாமாக இயங்குமாறு செய்யப் பெறுகின்றன. இக்கருவிகள் ஒரு சமயத்தில் பறந்து செல்லும் பொது இயல் மின்னிகளின் எண்ணிக்கைகளை அளந்து காட்டவும் செய்யும். இதனைப் 'பொது இயல் மின்னி இளக்கி'[1] என்று வழங்குவர்.

குளிர்ப்பான் [2] அணுஉலையின் முதல் நிலைப்பொருள்[3] ஆற்றலாகும். வெடிக்கும் ஒவ்வொரு யுரேனியக் கருவினின்றும் நேரடியாக மிக உயர்ந்த வேகத்துடன் விடுவிக்கப் பெறும் இரண்டு அல்லது மூன்று துணுக்குகளால் அவ்வாற்றல் விடுவிக்கப் பெறுகின்றது. அவை அணு உலையிலுள்ள எல்லாப் பொருள்களிடமும் மோதுகின்றன ; அவை, யாவும் பொருண்மை பெற்றிருப்பதாலும், அணு போன்று. சிறிதாயிருப்பதாலும், எல்லாப் பொருள்களையும் அதிர்வு[4] அடையச் செய்கின்றன ; அதைத் தான் நாம் சூடு என்று. சொல்லுகின்றோம். தொடர்நிலை விளைவு நின்றதும், பொருள்கள் யாவும் உள்ளகத்தில் படிப்படியாக வேதியல் மாசுகளாகத்[5] திரளுகின்றன. சாதாரணமாக ஒர் உலையிலுள்ள சாம்பரை அகற்றுவது போலவே, இவற்றையும் உலையினின்று அகற்றுதல் வேண்டும். ஆனால், அணு உலையி-


  1. 13பொது இயல் மின்னி இளக்கி' -'neutron flawx'
  2. 14:குளிர்ப்பான் - coolant
  3. 15 முதல் நிலைப்பொருள் - primary product
  4. 16 அதிர்வு -vibration
  5. 17வேதியல் மாசுகள் -chemical impurities