பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணு உலைகள்

109


வருகிறது. மற்றொரு அணு உலையில் உள்ளகமும் தணிப்பானும் 20 அடி ஆழமுள்ள நீரில் தொங்க விடப் பெற்றுள்ளன; இவ்வமைப்பு குளிர்ப்பாணாகவும் காப்புறையாகவும் பயன்படுகின்றது. இன்னொரு உலையில் நீரில் கரைந்த யுரேனிய உப்பின் கலவை எரியை, தணிப்பான், குளிர்ப்பான் ஆகிய மூன்று வித செயல்களுக்கும் பயன்படுகின்றது. இன்னும் சில வகை உலைகளில் தூய்மையான யு-235 உள்ளகத்தில் பயன்படுகின்றது; இவற்றில் இயற்கை யுரேனியத்துடன் யு-235 ஐப் பல்வேறு சத விகிதங்களில் கலந்தும் அல்லது இயற்கை யுரேனியத்தைத் தனியாகவும் பயன்படுத்தச் செய்கின்றனர். அண்மையில் அமைக்கப் பெற்ற ஓர் உலையில் பென்சில் கரி அல்லது கன நீருக்குப் பதிலாக பெரிலியம் என்ற மிக இலேசான உலோகம் தணிப்பானாகப் பயன்படுகின்றது. இன்னோரு முக்கியமான உலை ஆராய்ச்சிக்கு மட்டிலும் பயன்படுகிறது. அதில் பொது இயல் மின்னிகளைக் கொண்டு பல்வேறு பொருள்களை ஆய்ந்து எவை தேய்மானமின்றி அதிகக் காலத்திற்கு நீடிக்கும் என்று கண்டறிகின்றனர். பல்வேறு வகை எஃகு, ஸர்கோனியம், வேறு உலோகங்கள் ஆகியவை பல்வேறு சூட்டு நிலைகளில் பொது இயல் மின்னிகளின் தாக்குதலுக்கு உட்படுத்தப் பெறுகின்றன. மற்றொரு அணு உலையில் பொது இயல் மின்னிகளின் புயலை உண்டாக்கி மருத்துவத்துறை. பிற துறைகள் ஆகியவற்றில் ஆராய்ச்சிக்குப் பயன்படும் கதிரியக்க ஓரிடத்தான்களைச் சாதாரணப் பொருள்களிலிருந்து உற் பத்தி செய்கின்றனர். இக்கூறியவற்றால் அணு உலை அமைப்பின் சோதனைக் காலம் இன்னும் முடிவுறவில்லை யென்றும், புதிய கண்டுபிடிப்புக்களும்36 புதிய அமைப்புக்களும்37 எதிர் காலத்தில் நிறுவப்பெறும் அணு உலைகளைச் சிறப்புடையன வாக்கும் என்றும் அறிகின்றோம்.

ஏனைய உலைகள்-அணு உலைகள் : வேறுபாடுகள் : இவ்விடத்தில் ஏனைய உலகளுக்கும் அணு உலைகட்கும் உள்ள வேறு


36 கண்டுபிடிப்புக்கள் - discoveries, 37 அமைப்புக்கள் - designs.