பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரியக்கம் ? &

வழங்குகின்றனர். ஜே. ஜே. தாம்சன் என்பார் இந்தக் கதிர் களேக் காந்த மண்டலத்திற்குட்படுத்தி ஆராய்ந்தார். படத் தில் காட்டியுள்ளவாறு (படம்-13) காந்தம் வருவதற்குமுன் மூன்றுவகைக் கதிர்களும் ஒன்று சேர்ந்திருந்தன. காந்தம் அருகில் வந்ததும் ஆல்பா - கதிர்கள் ஒரு பக்கமாகவும், பீட்டா - கதிர்கள் அதற்கு எதிர்ப்பக்கமாகவும் திருப்பிக் கொண்டன. காமா கதிர்கள் மட்டிலும் காந்தத்தால் சிறிதும் பாதிக்கப்பெறவில்லை. இவ்வாறு தமது போக்கில் காந்த சக்தியால் மாறுபாடு அடையாத கதிர்கள் மின் னுாட்டம் பொருந்திய துணுக்குகளாக இருக்கமுடியாது. அவை தன்மையில் ஒளிக் கதிர்களேயேனும் " புதிர்க் கதிர்களையேனும் ஒத்திருக்க வேண்டும் என்று ஆகிக்கப் பெற்றது.

ஆல்பா-கதிர்கள் : ஆல்பா-துணுக்குகள் நேர் மின்னுரட் டம் பெற்றவை. அவை அயனி நிலையிலுள்ள பரிதிய அணுக் களாகும். அஃதாவது, பரிதியக் கருவிலிருந்து எதிர் மின்னிகள் அகன்ற நிலையிலுள்ள அணுக்களாகும். பசிதி யத்தின் அணு-எண் இரண்டு; மின்னூட்டமும் இரண்டே. இதன் வேகம் மிக அதிகம்; ஒளியின் வேகத்தில் பதினந் தில் ஒரு பங்காகும். அஃதாவது, விடிை ஒன்றிற்கு சுமார் 12,000 மைல் வேகத்தில் செல்கிறது. துப்பாக்கியினின்று வேகமாக ஓடும் குண்டின் வேகம் வினுடிக்கு அரைமைல் தான். எனவே, ஆல்பா-கதிர்கள் மனிதன் கையிலுள்ள வேகமான ஆயுதங்களிலெல்லாம் சிறந்த ஆயுதங்களாக அமைகின்றன. துப்பாக்கிக் குண்டின் வேகத்திலும் சிறந்த வேகம் இல்லை என்று கருதியிருந்த மனிதனுக்கு இது வியப் பினும் வியப்பாகும். எந்தப் பொருளினின்று இக்கதிர்கள் வெளிவருகின்றனவோ அந்தப் பொருளுக்கேற்ப இதன் தொடர்நிலை வேகமும் மாறும். இவற்றின் எடை எதிர்மின்னி களைப்போல் 75000 மடங்கு அதிக எடையுள்ளவை.

ஆல்பா கதிர்கள்-alpha rays, பீட்டா கதிர்கள் - beta rays. * stior – 356 5sir - gamma rays. “ offié கதிர்கள் - photons. ' புதிர்க்கதிர்கள் - x-rays.

58ー10