பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அணுவின் ஆக்கம்


எல்லா அணுக்களும் உடைந்து ஒரு வினாடிக்குள் வேறு பொருளாக மாறிவிடக்கூடும்; வேறு சிலவற்றில் சில நிமிடங்களில் அல்லது சில மணிகளில் இக்கிரியை முற்றுப்பெறும். சிதைந்தழியும் பகுதி சிறிதாக இருந்தால் கதிரியக்கக் கிரியை28 வலிவற்றதாக இருக்கும்; கதிரியக்கத் தனிமமும் ஆண்டுக் கணக்கில் அல்லது நூற்றாண்டுக் கணக்கில் சிதைந்தழிந்து கொண்டேயிருக்கும். அவ்வாறு சிதைத்தழியும் வேகம் எந்த ஒரு தனிமத்திற்கும் ஒரே அளவாகத்தானிருக்கும். எனவே, அணுக்களின் நிலையிலாத்தன்மையின் வேகத்தை, அஃதாவது கதிரியக்கக் கிரியையின் தீவிரத்தை, ஒரு குறிப்பிட்ட அளவுள்ள தனிமம் அது பாதியாவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தை அளவாகக் கொண்டு அளக்கலாம். (படம்-21). அக் காலஅளவினை

அறிவியலறிஞர்கள் அத்தனிமத்தின் 'அரை - வாழ்வு'29 என்று வழங்குவர். 'அரை-வாழ்வு’ என்பது ஒரு குறிப்பிட்ட


28கதிரியக்கக் கிரியை-radioactivity. 29'அரை-வாழ்வு’- 'half-fife’.