பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிரியலும் அணுவும்

177


கடிகாரத்தின் முகம் இரவிலும் தெரிவதற்காக ரேடிய உப்பினக்கொண்டு மணிகாட்டும் முட்களையும் எண்களையும் பூசி வைப்பதுண்டு. தொழிற்சாலைகளில் உபயோகிக்கும் உப்பு வர்ணத்தில் மிகச் சிறிய அளவு ரேடியம் இருக்கும். இத்தகைய வர்ணத்தை நியு ஜெர்ஸி என்ற நகரில் மயிரினாலான தூரிகைகளைக்5 கொண்டு எழுதிய பெண்கள், துரிகைகள் கூராக இருப்பதற்கு அவற்றை நாக்கிலுள்ள எச்சிலைத் தொட்டு உதடுகளில் வைத்துச் சுழற்றிக் கூர்மையாகச் செய்தனர். இப்படிச் செய்ததனால் மிக மிக நுட்பமான அளவில் ரேடியம் அவர்கள் வாயின் வழியே உடம்பினுள் சென்றது. ரேடியத்தின் அரை-வாழ்வு 1600 ஆண்டுகள் என்பது நமக்குத் தெரியும். அப் பெண்கள் விழுங்கிய ரேடியம் அளவில் சிறிதாயினும், நெடுகத் தொடர்ந்து எமனாகக் கதிர்களை வீசிக்கொண்டே இருக்கும். இதனால் அப்பெண்களின் உள்ளுறுப்புக்கள் தின்னப்பெற்று சித்திரவதைக்குள்ளாகி இறுதியில் மரித்தனர். அவர்கள் விழுங்கிய சிறு அளவு ரேடியம் அவர்கள் எலும்பிலும் சேர்ந்து விட்டது. இவ்வாறு உயிரிழந்த மங்கையர் நூற்றுக்கு மேற்பட்டோர். இறந்த பெண்களின் எலும்புகள் ஆராய்ச்சிக்காகச் சோதனைச் சாலைகளில் வைக்கப்பெற்றுள்ளன. இந்த எலும்புகள் அருகில் இன்றும் கைகர் எண் - கருவியினைக் கொண்டு சென்றால் 'கிலிக்' ஒலி கேட்கின்றது. ரேடியத்தின் அரை - வாழ்வு 1800 ஆண்டுகள் என்பதை அறிந்த நமக்கு இதன் காரணம் நன்கு தெரியும். இவ்வாறு நேரிட்ட இழப்பு ரேடியக் கதிர் வீச்சினால் மட்டுமன்று; அறியாமைதான் இதற்கு முதற்காரணமாகும். ரேடியத்தைப்பற்றி முழு உண்மையை அறியாது அதனை மருத்துவ முறையில் பயன் படுத்தியபொழுது இத்தகைய கேடுகளே விளைந்தன.

இன்று கதிரியக்க விளைவினைப்பற்றிப் பொது மக்களுக்கு அறிவிப்பதில் அணுவாற்றல் குழு ஈடுபட்டிருக்கின்றது. அவற்றின் நற்பலன்களைப்பற்றியும் தீங்குகளைப்பற்றியும்


5தூரிகை-brush. 53–13