பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிக் என்று ஒலிப்பதிலிருந்து ஓர் அறிவியல் அறிஞர் ஒர் அணுத்தொகுதியின் இருப்பிடத்தை அறியலாம்.

மருத்துவத் துறையில் நோயின் குணங்களைக்கொண்டு அது இன்ன நோய் என்று அறிவதும், அந்நோய் வருவதற் குரிய காரணத்தை அறிவதும் மிகவும் இன்றியமையாத் செயல்கள், வள்ளுவரும்,

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்று கூறியுள்ளார். நோயினத் தீர்க்கும் உபாயத்தினே அறிவதற்கும், அதனைச் செய்யும் வழி பிழையாமற் செய் வதற்கும் ஓரிடத்தான்களின் பண்புகள் துணை நிற்கின்றன. இருமல் நோய் சிகிச்சை செய்யப்பெறுவதனக்கொண்டு இதனை விளக்குவோம். இருமல்நோய் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்களை மாய்க்கும் கொடிய ஓர் அரக்கன். இது நுண்ணுயிர்களால் விளைகின்றது என்பது நமக்குந் தெரியும். மிகச் சிறந்த பெருக்காடியிலும் இக் கிருமிகளைக் காணமுடிவதில்லை. ஆகையால், இவற்றின் தன்மையும், இவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளும் இது காறும் கண்டறியப் பெறவில்லை. சாய்காப்", கேப்லன்" என்னும் இரு உயிர் நூலறிஞர்கள் இந்த நுண்ணுயிர் களின் திருவிளையாட்டினேக் கண்டறியப் புதுமையான முறை ஆயின மேற்கொண்டனர். அவர்கள் கதிரியக்கப் பாஸ் வரத்தை இந் துண்ணுயிர்கள் மேல் ஏற்றிவிட்டனர். இதல்ை இவ்வுயிர்களின் போக்கைத் தெளிவாக அறியமுடியும். இச் சோதனைகள் இன்னும் முற்றுப் பெறவில்லை. இவற்ருல் பல புது உண்மைகள் புலனுகி இருமல் நோயினைக் கட்டுப் படுத்தும் மு ைற க ள் தோன்றலாம். இவ்வாராய்ச்சி வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெலுத்தும் நாள் மிகத் தொலைவில் இல்லை.

  • " $ri:15fri' - Chaikoff. ** Gesùsosir - Kaplan* உயிர் நூலறிஞர்கள் - biologists.