பக்கம்:அணுவின் ஆக்கம்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

அணுவின் ஆக்கம்


 அறிவியலறிஞர்கள் இக் கதிரவனை ஒரு நெருப்புக் கோளம் எனப் பேசுகின்றனர் ; அது வீசும் சூட்டினையும் கணக்கிட்டிருக்கின்றனர். சூரியனுடைய மேற்பரப்பில் ஒவ்வொரு சதுர அங்குலமும் ஒவ்வொரு வினாடியிலும் ஐம்பது குதிரையோட்டம் அளவுள்ள ஆற்றலை வெளியே வீசுகின்றது. எடைக் கணக்கில் பார்த்தால் ஒவ்வொரு சதுர அங்குலமும் ஒரு நூற்றாண்டு வரை இப்படி ஆற்றலைக் கக்கிக்கொண்டே வந்தாலும் 1/20 அவுன்சுக்கு மேலாக இதன் பரப்பின் எடை கெடுவதில்லை. இவ்வளவுதானா என ஏளனம் செய்ய வேண்டாம். சூரியனது பரப்பு முழுவதையும் கணக்கிட்டால் நமக்கே அச்சம் வருகிறது ; ஒவ்வொரு வினாடிக்கும் நாற்பது இலட்சம் டன் அள்வு தேய்ந்து ஒழிகிறது! கதிரவன் முழுவதும் தேய்ந்து அழிந்தால் நம் பூமியின் நிலை என்ன ? நம் கதி என்ன ? நல்லகாலம் ! கதிரவன் மிகப் பெரியவன். கவலையே வேண்டாம். நம் தலைமுறையில் அச்சம் ஒன்றும் இல்லை; ஏன், கோடி தலைமுறைக்கும் அஞ்ச வேண்டுவதில்லை. 15X1012 ஆ ண் டு க ள் ஆனால் தான் சூரியன் அடியோடு தேய்ந்து அழியக் கூடும். ஒருநாளில் இந்த வகையில் கதிரவன் 31 x 1010 டன் எடையை இழக்கின்றான். ஆனால், சூரியனைவிட தொலைவிலுள்ள நட்சத்திரங்கள் இதனைவிட மூன்று இலட்சம் மடங்கு மிகுதியான ஆற்றலை வீசி எறிந்து தேய்கின்றன.

ஒளிச் சேர்க்கை ஆராய்ச்சி : ஒளிச் சேர்க்கை இன்றேல் தாவர உலகம் இல்லை. தாவரங்களின்றி பிராணி யுலகமும் இல்லை. சுருங்கக் கூறின், ஒளிச் சேர்க்கை நடைபெறாவிடில் இவ்வுலகம் பாழிடமாகத்தான் இருக்கும் ; உயிர் வாழ்க்கையே நடைபெறாது. ஒளிச் சேர்க்கை எளிதாக நடைபெறும் செயலாக இருப்பினும், அதனை மனிதன் செயற்கை முறையில் முற்றுப்பெறச் செய்ய இயலாது;அதனைப் புரிந்துகொள்ளவும் முடியாது. அது நடைபெறும் தன்மை மனிதனுக்கு நன்கு புரிந்துவிட்டால், மனிதனால் அதனை அபிவிருத்தி செய்ய இயலும் ; இப்புவியில் நாடோறும் பல்கிப் பெருகிவரும் மக்கட் தொகைக்கேற்ப இயற்கையிலுண்டாகும் உணவு உற்பத்தியைப் பெருக்கிக்-